இன்று சிலர் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் இளமை வயதிலேயே முதுமை தோற்றத்தை அடைகின்றனர். இதில் முதுமை தோற்றத்தைக் குறைத்து இளமையாக இருக்க உதவும் வழிகளைக் காணலாம்
ஆரோக்கியமான உணவு
கேரட், சாக்லேட் மற்றும் கிரீன் டீ போன்றவற்றை உட்கொள்வது சருமத்தின் லைகோபீனை அதிகரிக்கும். இந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்வது முதுமை எதிர்ப்புக்கு உதவுகிறது
பச்சை நிற சாறுகள்
சருமத்திற்கு புத்துணர்ச்சியளிப்பதில் பச்சை நிற சாறுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே சருமத்தைப் பொலிவாக்க பச்சை நிற சாறுகளை அருந்தலாம்
உடற்பயிற்சி
உடற்பயிற்சி செய்வது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கலவையை வெளியிடுகிறது. இது முதுமை தோற்றத்திலிருந்து விடுபட உதவுகிறது
மசாஜ் செய்தல்
சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையை ஊக்குவிப்பதற்கு, முகத்திற்கு உடலைப் போன்று மசாஜ் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்
நீரேற்றமாக இருப்பது
போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலை நீரேற்றமாக வைக்கலாம். இது இயற்கையாகவே வயதாவதை தாமதப்படுத்துகிறது
ஃபேஸ் யோகா செய்வது
மிருதுவான சருமத்திற்கும், வயதான தோற்றத்தைக் குறைக்கவும் ஃபேஸ் யோகா செய்யலாம்
மேக்கப்பை அகற்றுவது
முகம் சுத்தப்படுத்தப்படாத போது, உடனடியாக துளைகளை அடைத்து, நீண்ட காலத்திற்கு கொலாஜன் முறிவை ஏற்படுத்தலாம். எனவே ஒவ்வொரு நாளும் மேக்கப்பை அகற்றலாம்
சரியான தூக்கம்
ஒவ்வொரு இரவும் 8 மணி நேரம் தூங்குவது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இது ஒரே இரவில் புதிய செல் வளர்ச்சியுடன் சருமத்தை சரி செய்கிறது