அரிசி நீரை கீழே ஊற்றாமல் இப்படி யூஸ் பண்ணுங்க! பளபளனு இருப்பீங்க!

By Karthick M
29 Apr 2025, 19:52 IST

வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதிக்கப்படும் சருமத்திற்கு அரண் ஆக இருந்து பாதுகாக்க உதவுவது அரிசி நீர் என்றால் நம்ப முடிகிறதா?

அரிசி ஊறவைத்த அல்லது வேகவைத்த பின் கிடைக்கும் நீர் மாவுச்சத்தின் ஆதாரமாகும். இதில் வைட்டமின்கள், தாதுகள், ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளிட்டவை நிரம்பியுள்ளது.

அரிசி நீர் சருமத்தை பிரகாசமாக்கி அதற்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கவும் உதவுகிறது. இதுபோல தோல் பராமரிப்புக்கு பல நன்மைகளை வழங்கும்.

எரிச்சலூட்டும் சருமத்திற்கு ஆற்றும் திறன்களையும், சருமத்தை சுத்தம் செய்யும் தன்மைகளையும் கொண்டிருக்கிறது.

அரிசி நீரில் ஃபெருலிக் அமிலம் இருக்கிறது. இது சூரியனால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும்.

கொரிய தோல் பராமரிப்பு முறையில் முதலிடத்தில் அரிசி நீர் இருக்கிறது. இதில் அந்த அளவு நன்மை இருக்கிறது.