கோடைக்காலத்தில் சருமத்திற்கு ரோஸ் வாட்டர் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இது சருமத்தை குளிர்வித்து, மென்மையாக மற்றும் பளபளப்பாக வைக்கிறது. இதில் சருமத்திற்கு நன்மை பயக்கும் வகையில் அன்றாட வழக்கத்தில் ரோஸ் வாட்டரை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைக் காணலாம்
ரோஸ் வாட்டரைத் தெளிப்பது
நாளின் எந்த நேரத்திலும், சருமத்திற்கு ரோஸ் வாட்டரைத் தெளிப்பது சருமத்தை ஈரப்பதமாக்கவும், புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. மேலும் எரிச்சலைப் போக்கவும் உதவுகிறது
ரோஸ் வாட்டர் டோனர்
சருமத்தில் pH அளவை சமநிலைப்படுத்தவும், சருமத் துளைகளை இறுக்கவும், ஈரப்பதமாக வைக்கவும் ரோஸ் வாட்டரைப் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்
குளியல் நீரில்
குளியல் நீரில் சிறிது ரோஸ் வாட்டர் சேர்க்கலாம். இது நிதானமான மற்றும் மணம் மிக்க அனுபவத்தைத் தருகிறது. இவை சருமத்தை மென்மையாக மாற்ற உதவுகிறது
ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்
சந்தனம், முல்தானி மிட்டி அல்லது கடலை மாவுடன் ரோஸ் வாட்டரை கலந்து சருமத்திற்கு பயன்படுத்துவது, சருமத்தை இயற்கையாகவே குளிர்விக்கும் ஃபேஸ் பேக்கை உருவாக்கலாம்
வெயிலில் இருந்து நிவாரணம் பெற
வீக்கத்தைக் குறைக்கவும், சருமம் சிவந்து போதல், இயற்கையான நிவாரணத்தை அளிக்கவும், வெயிலில் எரிந்த பகுதியில் குளிர்ந்த ரோஸ் வாட்டரைப் பயன்படுத்தலாம்
குறிப்பு
சருமத்திற்கு ரோஸ் வாட்டரைப் பயன்படுத்திய பிறகு, எரிச்சல், தடிப்புகள் அல்லது கரடுமுரடான தன்மை போன்றவை ஏற்பட்டால், இதைத் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு முன்பாக ஒரு தோல் நிபுணரை அணுக வேண்டும். இதைக் கண்டறிய பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது