அதீத வெப்பத்தால் சருமம் சந்திக்கும் பல பிரச்சனைகளில் பிரதான ஒன்று வியர்குரு பிரச்சனை. அரிப்பு, எரிச்சலை ஏற்படுத்தும் இதற்கான வீட்டு வைத்தியத்தை பார்க்கலாம்.
முல்தானி மிட்டி
முல்தாணி மிட்டி சருமத்தில் உள்ள மாசுபடுத்தும் செல்களை அகற்றுவதற்கு சிறந்த தீர்வாக உள்ளது. இது பாக்டீரியா மற்றும் பிற நுண்ணுயிரிகளுக்கு எதிராக செயல்படுகிறது.
ஐஸ் க்யூப்
சருமத்திற்கு ஐஸ் க்யூப் பயன்படுத்துவது சரும அழற்சி, அரிப்பு மற்றும் சிவத்தல் போன்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
கற்றாழை
இதில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் நிறைந்துள்ளது. இவை முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
தயிர்
தயிரில் வைட்டமின் பி6, பி12 மற்றும் சி, கால்சியம், புரதம், துத்தநாகம், பாந்தோதெனிக் அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
வேப்பிலை
முகப்பரு மற்றும் அரிக்கும் தோலழற்சி போன்ற பல்வேறு வகையான பூஞ்சை தொற்றுக்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.