மழைக்கால சரும பராமரிப்பு... இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
By Kanimozhi Pannerselvam
14 Oct 2024, 16:00 IST
சுத்தம்
மழைக்காலங்களில் சருமத்தை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். லேசான ஃபேஸ் வாஷ் மூலம் உங்கள் முகத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை கழுவவும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் நீங்கும்.
ஈரப்பதம்
மழைக்காலங்களில் கூட சருமத்திற்கு மாய்ஸ்சரைசர் தேவை. சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க லேசான வாட்டர் பேஸ் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தவும்.
மழைக்காலங்களில் சன்ஸ்கிரீன் தேவையில்லை என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் அது தவறானது. சூரியனின் கதிர்கள் சருமத்தை சேதப்படுத்தும், எனவே சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம்.
ஆரோக்கியமான உணவு
சரிவிகித உணவை உண்ணுங்கள் மற்றும் போதுமான தண்ணீர் குடிக்கவும். உங்கள் உணவில் பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்க்கவும். இதனால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
ஃபேஸ் மாஸ்க், ஸ்க்ரப்கள்
வாரத்திற்கு ஒரு முறை வீட்டில் தயாரிக்கப்பட்ட நேச்சுரலான ஃபேஸ் மாஸ் மற்றும் ஸ்க்ரப்களைப் பயன்படுத்தவும். இது இறந்த செல்களை நீக்கி, சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது.
கிளிசரின், ரோஸ் வாட்டர்
கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டரை சம அளவு கலந்து முகத்தில் தடவவும். இதனால் சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.