கோடைக்காலத்தில் சருமத்தை வறட்சியிலிருந்து பாதுகாக்க நீரேற்றமாக வைப்பது அவசியமாகக் கருதப்படுகிறது. இதில் சருமத்தை நீரேற்றமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க உதவும் குறிப்புகளைக் காணலாம்
போதுமான நீரேற்றம்
சருமத்தை நீரேற்றமாக வைக்க போதுமான நீரேற்றம் பெறுவது அவசியமாகும். இதற்கு தண்ணீர் அருந்தலாம். இதற்கு வெள்ளரிக்காய், புதினா அல்லது எலுமிச்சை சேர்த்து முயற்சிக்கலாம். இவை சருமத்தை உள்ளிருந்து ஈரப்பதமாக்க உதவுகிறது
வெள்ளரி சாறு தடவுவது
வெள்ளரிக்காய் புத்துணர்ச்சியூட்டுவது மட்டுமல்லாமல், அதில் நீர்ச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருட்களும் நிறைந்துள்ளது. இவை சூரிய ஒளியால் வெளிப்படும் சருமத்தை ஈரப்பதமாக்கி, ஆற்றலைப் பெறுவதற்கு வெள்ளரிக்காய் சாற்றை முகத்தில் தடவலாம்
நீர்ச்சத்து நிறைந்த உணவுகள்
அன்றாட உணவில் ஆரஞ்சு, தர்பூசணி, வெள்ளரி போன்ற நீர்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை உடலை ஈரப்பதமாக்கி, சருமத்தை உள்ளிருந்து நீரேற்றமாக வைக்கிறது
குளிர்ந்த நீர்
சூடான குளியல் எடுப்பது அல்லது முகத்தைக் கழுவுவது இதமாகத் தோன்றினாலும், அது சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்ப் பசையை நீக்கிவிடலாம். எனவே, சருமத்தை பளபளப்பாகவும் ஈரப்பதமாகவும் வைக்க குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தலாம்
தேங்காய் எண்ணெய்
ஈரமான சருமத்தில் தேங்காய் எண்ணெயை லேசாக பயன்படுத்துவது, ஈரப்பதத்தைத் தக்கவைத்துக் கொள்ள உதவுகிறது. இது முழங்கைகள், முழங்கால்கள் அல்லது பாதங்கள் போன்ற வறண்ட சருமப் பகுதிகளுக்கு ஏற்றதாக அமைகிறது
தேன் மற்றும் தயிர் ஃபேஸ் மாஸ்க்
தேன், தயிர் இரண்டுமே சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவக்கூடிய இயற்கை பொருள்கள் ஆகும். ஒரு ஸ்பூன் தேன் மற்றும் தயிர் கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் வைத்து, பின்னர் கழுவி விடலாம். இது மென்மையான மற்றும் மிருதுவான சருமத்திற்கு வழிவகுக்கிறது
கற்றாழை ஜெல்
கோடைக்காலத்தில் சருமத்திற்கு புதிய கற்றாழை ஜெல் பயன்படுத்துவது மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக, சூரியஒளியில் வெளிப்படும் சருமத்தை குளிர்ச்சியாக, நீரேற்றமாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதை படுக்கைக்கு முன் லேசான மாய்ஸ்சரைசராகப் பயன்படுத்தலாம்