கழுத்தில் உள்ள கருமையை ஒரே வாரத்தில் நீக்கும் வீட்டு வைத்தியம்!

By Kanimozhi Pannerselvam
07 Feb 2024, 23:13 IST

ஓட்ஸ்

ஓட்ஸில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் ஆற்றவும் உதவுகிறது. ஓட்ஸ் பவுடரை தக்காளி சாறுடன் கலந்து கழுத்தில் கருமை உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் அப்படியே விடவும்.

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோலில் சருமத்தை வெண்மையாக்கும் தன்மை உள்ளது. ஆரஞ்சு தோல் பவுடரை பாலுடன் கலந்து சருமத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கின் சாற்றுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் கருமையாக இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். இது 10-15 நிமிடங்கள் விடப்பட வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். நல்ல பலனைப் பெற தினமும் இதனைச்செய்ய வேண்டும்.

கற்றாழை

கற்றாழை ஜெல்லை கழுத்தில் கருமையில் உள்ள பகுதியிலப்ளேசெய்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். அதன்பின்னர் குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி கழுவ வேண்டும்.

எலுமிச்சை

எலுமிச்சை சாறுடன் ரோஸ் வாட்டரை சம பாகங்களாக கலந்து கழுத்தில் தடவவும். இதை 15-20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும், அதன் பிறகு குளிர்ந்த நீரில் கழுவலாம். இதை தினமும் தடவுவது உங்கள் கருமையான கழுத்தின் நிறத்தை மாற்ற உதவும்.

காபி

காபி தூள் உடன் சிறிதளவு தண்ணீர் கலந்து பேஸ்ட்டாக மாற்றவும். இதனை கழுத்தில் தடவி 10-15 நிமிடங்கள் விடவும். இதற்குப் பிறகு, அதை கழுவி, உலர்த்தி, ஈரப்படுத்தவும். இந்த பேக்கை வாரத்திற்கு ஒரு முறை தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.