ரசாயன மாய்ஸ்சரைகளுக்கு மாற்றாக இந்த இயற்கை பொருட்களை பயன்படுத்துங்க!

By Kanimozhi Pannerselvam
21 Feb 2024, 10:48 IST

அவகேடோ

அவகேடோ பழங்களை நன்றாக மசித்து சருமத்தில் தடவுவதன் மூலமாகவோ அல்லது அவகேடோ எண்ணெய்யை பயன்படுத்துவதன் மூலமாகவோ உங்கள் சருமத்தை மாய்ஸ்சரைஸ் செய்யலாம்.

ஷியா பட்டர்

ஷியா மரத்தின் கொட்டையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஷியா பட்டர் சருமம் மற்றும் உதடுகளில் ஏற்படக்கூடிய வறட்சியைப் போக்க உதவுகிறது.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் தோல் மற்றும் முடி இரண்டிற்கும் நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது.

தேன்

தேன் ஒரு பாக்டீரியா எதிர்ப்பு பொருள் மற்றும் ஒரு அற்புதமான இயற்கை மாய்ஸ்சரைசர் ஆகும். இயற்கை தேனை அப்படியே முகத்தில் தடவினால்,சருமத்திற்உ உடனடியாக நீரேற்றம் கிடைக்கும். தேனுடன் பாதாம், எலுமிச்சை போன்ற இயற்கை பொருட்களையும் பயன்படுத்தலாம்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்ற வைட்டமின் சி உள்ளது, இது வறட்சியைக் குறைக்கிறது. வாழைப்பழத்துடன் தேன் அல்லது தயிர் சேர்த்து சருமத்தில் அப்ளே செய்வதன் மூலமாக வறட்சியைப் போக்கலாம்.