கொரிய பெண்களின் கொள்ளை அழகிற்கு இதுதான் காரணமாம்!

By Kanimozhi Pannerselvam
06 Jan 2024, 22:48 IST

உணவு முறை

கொரியர்கள் சாப்பிடும் சிறிய உருண்டை அளவிலான உணவான பாஞ்சான் என்பது பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொருட்களைக் கொண்டு தயரிக்கப்படுகிறது.

கிம்ச்சி

கொரிய சமையலின் முக்கிய அம்சமான கிம்ச்சி என்பது புரோபயாடிக் நிறைந்த புளிக்கவைக்கப்பட்ட காய்கறி உணவாகும். அடிக்கடி உட்கொள்வது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது கொரியன் முள்ளங்கி அல்லது முட்டைகோஸ் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

சைக்கிள்

கொரியாவில் தினசரி பயணங்களுக்கு சைக்கிள் ஓட்டுவது பொதுவானது. உடல் இயக்கத்தை உறுதி செய்யும் விதமாக கொரியர்கள் சைக்கிள் ஓட்டுவதை வழக்கமாக வைத்து உள்ளார்கள்.

இயற்கையுடன் இணைவு

கொரியர்கள் ஷின்ரின்-யோகு என்ற முறையை பின்பற்றுகிறார்கள். இதற்கு

அளவான உணவு

எடையை கருத்தில் கொண்டு மிகவும் குறைந்த அளவிலான உணவை எடுத்துக்கொள்வது கொரியர்களின் வழக்கமாகும். இந்தி யுக்தியானது எடை கட்டுப்பாட்டை ஊக்குவிக்கிறது மற்றும் அதிகப்படியான உணவை தவிர்க்க உதவுகிறது.

தேநீர்

கொரியர்கள் தேநீர் பிரியர்கள், குறிப்பாக அதிகப்படியான மூலிகை தேநீரை உட்கொள்கிறார்கள். இந்த மூலிகை தேநீரில் உள்ள ஆக்ஸினேற்ற பண்புகள், சோர்வை தளர்த்தி, சுறுசுறுப்பு தர உதவுகிறது.