வீட்டை விட்டு வெளியே செல்லும் போது பலரும் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவார்கள். ஆனால் தினசரி இதை பயன்படுத்துவது நல்லதா என பார்க்கலாம்.
தினமும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படுத்தாது என்றாலும் அதன் அளவில் கவனம் செலுத்த வேண்டும்.
முகம் தவிர, உங்கள் கழுத்து, காதுகள், கைகள், தோள்கள் போன்றவற்றிலும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தலாம்.
உங்களுக்கு ஏதேனும் தோல் பிரச்சனை இருந்தால் சன்ஸ்க்ரீன் பயன்படுத்தும் முன் மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது.
சன்ஸ்கிரீன் கோடையில் மட்டுமல்ல குளிர், மழைக்காலத்திலும் பயன்படுத்தலாம். சன்ஸ்கிரீன் தடவுவது தோல் புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கிறது.
தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதன் மூலம், சருமத்தில் கருமையான புள்ளிகள் வருவதற்கான வாய்ப்புகள் குறையும்.