ஷியா வெண்ணெய் ஒரு இயற்கையான சரும பராமரிப்புப் பொருளாக அமைகிறது. இவை சருமத்தை ஈரப்பதமாக்குவது மட்டுமல்லாமல் சருமத்தை சரி செய்வதிலிருந்து மென்மையாக்குவது வரை பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது
ஆழமான மாய்ஸ்சரைசேஷன்
ஷியா வெண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்க உதவும் ஒரு நல்ல மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. மேலும் இது வறண்ட சருமத்திற்கு ஊட்டமளித்து சருமத்தை மென்மையாக மற்றும் மிருதுவாக வைக்க உதவுகிறது
அரிக்கும் தோலழற்சிக்கு
ஷியா வெண்ணெயில் நிறைந்துள்ள ஈரப்பதம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், தடிப்புத் தோல் அழற்சி, அரிக்கும் தோலழற்சி மற்றும் இன்னும் பிற சருமம் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது
காயங்களை அகற்ற
ஷியா வெண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றங்கள் தோல் வெட்டுகள், கீறல்கள் மற்றும் சிறிய காயங்களை குணப்படுத்துவதற்கு உதவுகிறது
கொலாஜன் உற்பத்திக்கு
ஷியா வெண்ணெய் கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இவை கொலாஜன் உற்பத்தியை செயல்படுத்தி, சருமத்தை நெகிழ்வாகவும் இறுக்கமாகவும் வைத்திருக்க உதவுகிறது
முதுமை எதிர்ப்பு பண்புகள்
ஷியா வெண்ணெய் ஆனது வைட்டமின்கள் ஏ, ஈ போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இந்த வெண்ணெய் நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களைக் குறைத்து சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது