சருமத்திற்கு சால்மன் மீன் தரும் நன்மைகள்

By Gowthami Subramani
27 Sep 2024, 09:08 IST

அன்றாட உணவில் சால்மன் மீனைச் சேர்ப்பது சருமத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் சால்மன் மீன் உட்கொள்வது சருமத்திற்கு தரும் நன்மைகளைக் காணலாம்.

சருமத்தை ஈரப்பதமாக்க

இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சருமத்தை உள்ளே இருந்து ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இது சருமத்திற்கு நீரேற்றத்தை அளிப்பதுடன் புத்துணர்ச்சியைத் தருகிறது

சருமத்தை பொலிவாக்க

இந்த மீன்கள் வைட்டமின் டி-ன் சிறந்த மூலமாகும். இவை சருமத்தை பிரகாசமாக வைக்கவும், சீரான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது

முகப்பருவைக் குறைக்க

சால்மன் மீனில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் சருமத்தில் முகப்பருக்கள் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது. இது சருமத்தை தெளிவாக மற்றும் அமைதியாக வைக்க உதவுகிறது

நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்த

இதில் நிறைந்திருக்கும் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தவும், இறுக்கமாக்கி மென்மையாக வைத்திருக்கவும் உதவுகிறது

குணப்படுத்தும் பண்புகள்

சால்மன் மீனில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கறைகள், தழும்புகள் அல்லது பிற தோல் பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வு தருகிறது. இவை சருமத்தைப் பழுதுபார்க்க உதவுகிறது

கொலாஜன் உற்பத்திக்கு

சருமத்தை இளமையாகவும் உறுதியாகவும் வைக்க உதவும் கொலாஜன் உற்பத்திக்கு சால்மனில் உள்ள அதிகளவிலான புரதங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உதவுகிறது. இவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது