தினமும் இதை செய்தாலே போதும்... பார்லர் போகாமலேயே முகம் பளபளக்கும்!

By Kanimozhi Pannerselvam
28 Feb 2024, 13:38 IST

தோல் செல்கள் உருவாதல்

நாள் முழுவதும் புற ஊதா கதிர்கள், மாசுபாடு, வியர்வை மற்றும் அழுக்கு ஆகியவற்றை எதிர்த்துப் போராடிய சரும செல்கள், இரவில் நீங்கள் உறங்கும் போது தங்களை புதுப்பித்துக் கொள்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஸ்கின் கேருக்கு ஏற்ற நேரம்

இரவு நேரத்தில் ஆன்டி ஏஜிங் கிரீம் போன்ற சரும பராமரிப்பு சாதனங்களை பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இதனை சருமம் உறிஞ்சிக்கொள்ள அதிக நேரம் கிடைக்கிறது.

கொலாஜன் உற்பத்தி

சருமத்தை குண்டாகவும் மென்மையாகவும் வைத்திருக்க கொலாஜன் முக்கியமானது. சில கிரீம்கள் அதன் உற்பத்தியை அதிகரிப்பதாகக் கூறினாலும், ஆழ்ந்த 8 மணி நேர உறக்கம் இதன் உற்பத்திக்கு மிகவும் முக்கியமானது.

சருமம் மீதான அழுத்தம்

தூக்கம் உடலுக்கும், மனதிற்கும் மட்டுமல்ல சருமத்திற்குமான மன அழுத்தத்தைப் போக்குகிறது. தூக்கமின்மை மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவை அதிகரிக்கிறது (, இதனால் சருமத்தில் வறட்சி, கண்களைச் சுற்றி கருவளையங்கள் எழுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

சரும புதுப்பிப்பு

மேக் அப் அணியாத அழகுக்கு அவசியம் ஆழ்ந்த தூக்கம். நல்ல தூக்கம் தொடரும் போது அது இயற்கையாகவே முகத்துக்கு பளிச் தோற்றத்தை தருகிறது. இரவு நேர உறக்கம் உடல் தன்னைத்தானே குறிப்பாக சருமம் தன்னை பராமரித்துகொள்ள புதுப்பித்துக்கொள்ள உதவுகிறது.