ஆயுர்வேதத்தில் சிறந்து விளங்கும் துளசி இலைகள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது. இது தவிர, பல்வேறு சரும பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பண்புகளைக் கொண்டுள்ளது. ஆனால், சருமத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் தெரியுமா?
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த
துளசியில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அழற்சி எதிர்ப்பு, வைட்டமின் ஏ, சி, துத்தநாகம், கால்சியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன
சோள மாவு
துளசிப் பொடியில் சோளமாவைக் கலந்து, ரோஸ் வாட்டர் சேர்த்து அதை முகத்தில் வட்ட இயக்கத்தில் தடவி வர சருமத்தை இறுக்கம் மற்றும் சுருக்கம் போன்ற முதுமை அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது
தக்காளி
சருமத்தின் நிறத்தை அதிகரிக்க துளசி இலைகளைப் பயன்படுத்தலாம். இதற்கு துளசி பொடியில் தக்காளி கூழ் மற்றும் சில துளிகள் தேன் சேர்த்து முகத்தில் தடவலாம்
ஓட்ஸ்
துளசி மற்றும் ஓட்ஸ் இரண்டும் சேர்ந்த கலவையை சருமத்திற்கு பயன்படுத்தலாம். இதற்கு துளசி மற்றும் ஓட்ஸ் பொடியைக் கலந்து நீர் சேர்த்து கலவை தயார் செய்ய வேண்டும். இதை முகத்தில் குறைந்தது 20 நிமிடங்கள் வைத்து பின் கழுவலாம்
தயிர்
துளசி இலைகளைப் பொடியாக்கி அதில் தயிர் சேர்த்து முகத்தில் 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை வைக்க வேண்டும். இந்த கலவையைப் பயன்படுத்துவது சருமத்தில் உள்ள கறைகளை நீக்க உதவுகிறது
கிரீம்
சரும பராமரிப்புக்காக துளசி மற்றும் கிரீம் கலவையைப் பயன்படுத்தலாம். இதற்கு துளசி இலைகளை அரைத்து, அதில் கிரீம் சேர்த்து பேஸ்ட் தயார் செய்து முகத்தில் சிறிது நேரம் விடவும்
வேம்பு
துளசி மற்றும் வேப்ப இலைகளை அரைத்து கலவையாக தயார் செய்ய வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் வரை வைத்து பின் கழுவி விடலாம். இவை முகத்தில் பருக்கள் வராமல் தடுக்க உதவுகிறது
இந்த வழிகளில் முகத்தில் துளசி இலைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு சரும ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்