சருமத்தைப் பொலிவாக்குவதில் சந்தனம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. இதில் சருமத்தைப் பளபளப்பாக வைக்க சந்தன பவுடரை பயன்படுத்துவதற்கான முறைகளைக் காண்போம்
சந்தன பவுடர்
சந்தன பவுடரை தேங்காய் எண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்க வேண்டும். இந்தக் கலவையை ஸ்க்ரப்பாக பயன்படுத்தலாம். இது சருமத்தில் இறந்த செல்களை நீக்கி மென்மையாக மற்றும் பளபளப்பாக மாற்ற உதவுகிறது
சந்தன சன்ஸ்கிரீன்
சந்தனப் பொடியை கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து பயன்படுத்துவது இயற்கையான சன்ஸ்கிரீனாக செயல்படுகிறது. மேலும் புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது
சந்தன டோனர்
சந்தன பவுடரை நீரில் சேர்த்து டோனராகப் பயன்படுத்தலாம். இது சருமத் துவாரங்களைச் சுருங்கச் செய்வதுடன், சருமத்தில் இயற்கை எண்ணெயைத் தக்க வைக்க உதவுகிறது
சந்தன சீரம்
இதை சருமத்திற்குத் தடவுவதன் மூலம் சருமத்தில் காணப்படும் தழும்புகளைக் குறைப்பதுடன், சருமத்தை பளபளப்பாக வைக்க உதவுகிறது
சந்தன ஃபேஸ்பேக்
சந்தன பொடியுடன் ரோஸ் வாட்டர் அல்லது பாலைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் வைத்து பிறகு காய்ந்ததும் கழுவி விடலாம். இவை சருமத்தின் துளைகளைச் சுத்தம் செய்ய உதவுகிறது
முகப்பரு நீங்க
சந்தன பவுடரை சில துளிகள் தண்ணீர் மற்றும் தேயிலை மர எண்ணெயைச் சேர்த்து பேஸ்ட்டை உருவாக்க வேண்டும். இதை பருக்கள் மற்றும் முகத்தின் சிவந்த தோலில் தடவி, சருமத்தை குளிர்விப்பதன் மூலம் முகப்பருவை குணப்படுத்த உதவுகிறது
குளிப்பதற்கு சந்தனம்
குளிக்கும் நீரில் சில துளிகள் சந்தன எண்ணெயைச் சேர்த்து குளிக்கலாம். இது சருமத்தை ரிலாக்ஸ் ஆக வைக்க உதவுகிறது
இவ்வாறு பல்வேறு வழிகளில் சந்தனத்தைப் பயன்படுத்துவது சருமத்தை பளபளப்பாகவும். பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது. எனினும், சருமம் உணர்திறன் மிக்கது என்பதால், அரிப்பு, எரிச்சல் போன்ற ஒவ்வாமை பிரச்சனைகளைத் தவிர்க்க பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது