முகத்தில் கரும்புள்ளி அதிகமா இருக்கா? உருளைக்கிழங்கை இப்படி பயன்படுத்துங்க.

By Gowthami Subramani
05 Dec 2023, 16:04 IST

முக அழகைப் பாதிக்கும் வகையில் சில காரணங்களால் கரும்புள்ளிகள் தோன்றுகின்றன. உருளைக்கிழங்கைப் பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் கரும்புள்ளிகளைக் குறைக்கலாம்

ஊட்டச்சத்துகள்

உருளைக்கிழங்கில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை நிறைந்துள்ளன

உருளைக்கிழங்கு தோல்

உருளைக்கிழங்கு தோலைப் பயன்படுத்தி முகத்தில் ஏற்படும் கரும்புள்ளி பிரச்சனையைக் குறைக்க உதவுகிறது. இதற்கு உருளைக்கிழங்கு தோலை பாதிக்கப்பட்ட இடத்தில் மெதுவாக தேய்க்கவும்

உருளைக்கிழங்கு சாறு

கரும்புள்ளிகளைக் குறைக்க உருளைக்கிழங்கைச் சாற்றைப் பயன்படுத்தலாம். இதற்கு உருளைக்கிழங்கு சாற்றை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும்

உருளைக்கிழங்கு & எலுமிச்சைச் சாறு

உருளைக்கிழங்குடன் எலுமிச்சைச் சாறு கலந்து தடவுவது கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது. பருத்தி துணியில் எலுமிச்சைச் சாறு கலந்த உருளைக்கிழங்கு சாற்றில் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்

உருளைக்கிழங்கு & முல்தானி மிட்டி

இந்த கலவையைக் கரும்புள்ளி இருக்கும் இடத்தில் தேய்க்க, கரும்புள்ளிகள் குறைவதைக் காணலாம். இவை சருமத்தில் உள்ள கறைகளைக் குறைக்க உதவுகிறது

உருளைக்கிழங்கு & தக்காளி சாறு

உருளைக்கிழங்குடன், தக்காளி சாற்றைக் கலந்து தடவி வருவதன் மூலம் கரும்புள்ளிகள் பிரச்சனையைக் குறைக்கலாம். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க உதவுகிறது

உருளைக்கிழங்கு & தேன்

கரும்புள்ளிகளைக் குறைக்க உருளைக்கிழங்கு சாறுடன் தேன் கலந்து தடவலாம். உருளைக்கிழங்கு சாற்றை எடுத்து, அதில் சிறிது தேன் கலந்து சருமத்தில் தடவி வர கரும்புள்ளிகளைக் குறைக்க உதவுகிறது

முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளைக் குறைக்க உருளைக்கிழங்கு இந்த முறைகள் அனைத்தையும் முயற்சிக்கலாம்