கடலை மாவில் உள்ள இயற்கையான எக்ஸ்போலியேட் பண்புகள், இறந்த சரும செல்களை நீக்கி, உங்கள் சருமத்தை பளபளப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது. இதனை இயற்கையான வழியில் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்றால் இங்குள்ள சில குறிப்புகளை முயற்சிக்கவும்.
எலுமிச்சை சாறு + பால்
ஒரு டீஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் போதுமான பாலுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை மாவு கலந்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கவும். உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
இரண்டு தேக்கரண்டி கடலை மாவுடன் 2 தேக்கரண்டி வெள்ளரி சாறு மற்றும் ஐந்து துளிகள் எலுமிச்சை சாறு கலக்கவும். பேஸ்ட்டை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி, 30 நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.
தயிர் + எலுமிச்சை சாறு
4 டீஸ்பூன் கடலை மாவுடன் எலுமிச்சை சாறு அல்லது ரோஸ் வாட்டரை கலக்கவும். இத்துடன் சம அளவு தயிர் அல்லது மோர் சேர்க்கவும். உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
தேன்
சில துளி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் தேனுடன் கடலை மாவைக் கலந்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் சுத்தம் செய்யவும். இது சன் டான் அல்லது சீரற்ற சரும நிறத்தை சரி செய்ய உதவும்.
தயிர்
ஒரு கிரீம் பேஸ்ட்டை உருவாக்க தயிருடன் கடலை மாவைக் கலக்கவும். இதை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி, 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும், பின்னர் கழுவி, உங்கள் சருமத்தை மெதுவாக உலர வைக்கவும்.
பாதாம் +பால்
4 டீஸ்பூன் பாதாம் பவுடர், 1 டேபிள் ஸ்பூன் பால், ½ டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் கடலை மாவு ஆகியவற்றை கலக்கவும். இதனை உங்கள் கழுத்து மற்றும் முகத்தில் தடவவும். 30 நிமிடங்கள் அப்படியே வைத்த பிறகு, உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும்.
மஞ்சள் + ரோஸ் வாட்டர்
ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் சில துளிகள் ரோஸ் வாட்டருடன் கடலை மாவைக் கலக்கவும். இதனை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து நன்றாக கழுவவும். இது முகப்பருக்களை எதிர்த்து போராடக்கூடிய சக்தி வாய்ந்தது.