ஜொலிக்கும் சருமத்தைப் பெற நெய்யை இப்படி யூஸ் பண்ணுங்க.!

By Gowthami Subramani
09 Jan 2024, 12:03 IST

இந்திய சமையலறைகளில் பிரதானமாக பயன்படுத்தப்படும் நெய் சருமத்திற்கு பல்வேறு அதிசயங்களைத் தருகிறது. இது மந்தமான சருமத்தை பளபளப்பான சருமமாக மாற்ற உதவுகிறது

நெய்யுடன் கடலை மாவு

ஒரு டீஸ்பூன் கடலை மாவு இரண்டு டீஸ்பூன் நெய்யைக் கலந்து மென்மையான எக்ஸ்ஃபோலியேட்டிங் ஃபேஸ் பேக்கை தயார் செய்யலாம். இது இறந்த சரும செல்களை நீக்கி, சருமம் புத்துணர்ச்சி பெற உதவுகிறது

சந்தனம் மற்றும் நெய்

சந்தனப் பொடியுடன் நெய் சேர்த்து முகத்திற்கு ஃபேஸ் பேக் அப்ளை செய்யலாம். சந்தனம் தோல் அழற்சி மற்றும் சிவத்தல் போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது

நெய் மற்றும் தேன் பேக்

இவை இரண்டுமே சருமத்தை நீரேற்றத்துடன் வைக்க உதவுகிறது. தேனில் உள்ள இயற்கையான ஆன்டி பாக்டீரியல் பண்புகள் முகப்பருவை எதிர்த்துப் போராட உதவுகிறது

கற்றாழையுடன் நெய்

நெய்யை கற்றாழை ஜெல்லுடன் கலந்து இனிமையான மற்றும் ஈரப்பதமூட்டும் ஃபேஸ் பேக்கை தயார் செய்யலாம். இந்த கற்றாழை எரிச்சலூட்டும் சருமத்தை அமைதிப்படுத்துகிறது

மஞ்சள் கலந்த நெய்

மஞ்சள் இயற்கையாகவே அழற்சி எதிர்ப்புப் பண்புகள் போன்ற பல்வேறு பண்புகள் நிறைந்ததாகும். இவை சருமத்தை பிரகாசமாக்க வைக்க உதவுகிறது. மேலும், சருமத்தை ஈரப்பதமாக்கி ஊட்டமளிக்கிறது

இந்த வழிகளில் சருமத்திற்கு நெய்யைப் பயன்படுத்தி முகத்தைப் பொலிவாக்கலாம். எனினும் சருமம் உணர்திறன் மிக்கதென்பதால், புதிய பொருள்களைப் பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது