சரும பராமரிப்பில் சோள மாவு (Corn flour) முக்கிய பங்கு வகிக்கிறது. இது எண்ணெய் உறிஞ்சும் மற்றும் இனிமையான பண்புகளுடன் தெளிவான சருமத்திற்கு வழிவகுக்கிறது. இதில் சருமத்திற்கு சோளமாவு பயன்படுத்துவதற்கான சில எளிய வழிகளைக் காணலாம்
தேன், சோளமாவு ஃபேஸ்பேக்
இந்த ஃபேஸ்பேக் தயார் செய்ய 1 தேக்கரண்டி சோள மாவை, 1 தேக்கரண்டி தேன் மற்றும் தண்ணீருடன் சேர்க்க வேண்டும். இதை 10-15 நிமிடங்கள் அப்படியே வைப்பதன் மூலம் மென்மையான, நீரேற்றப்பட்ட சருமத்தைப் பெறலாம்
சோளமாவு ஸ்க்ரப்
இந்த ஸ்க்ரப் தயார் செய்வதற்கு சோள மாவை பால் அல்லது தயிருடன் கலக்க வேண்டும். இதை மெதுவாக மசாஜ் செய்வதன் மூலம் மென்மையான, பிரகாசமான சருமத்தைப் பெறலாம்
அதிகப்படியான எண்ணெயை உறிஞ்ச
2 தேக்கரண்டி சோள மாவை தண்ணீரில் கலந்து பேஸ்ட்டை உருவாக்கலாம். இதை சருமத்தில் தடவி 10-15 நிமிடங்கள் அப்படியே வைப்பது அதிகப்படியான எண்ணெயை உறிஞ்ச உதவுகிறது
மஞ்சள் ஃபேஸ்பேக்
மஞ்சள் மற்றும் தண்ணீருடன் சோளமாவைக் கலந்து சருமத்தில் தடவுவது முகப்பரு வடுக்களைநீக்கவும் மற்றும் சரும நிறத்தை மேம்படுத்தவும் உதவுகிறது
ரோஸ்வாட்டர் ஃபேஸ்பேக்
ரோஸ் வாட்டருடன் சோள மாவைக் கலந்து பேஸ்டாக தயார் செய்யலாம். இது சருமத்தை இறுக்கமாக்கி வடுக்களை குறைக்க உதவுகிறது
குறிப்பு
சருமம் உணர்திறன் மிக்கது என்பதால், புதிய சரும பராமரிப்பு சிகிச்சைகளை முயற்சிக்கும் முன் எப்போதும் ஒரு பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது