காபி சருமத்திற்கு பல நன்மைகளை தருகிறது. இதனை சரும பராமரிப்பில் எப்படி இணைப்பது என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.
காபி ஃபேஸ் மாஸ்க்
காபி பவுடரில் அரிசி மாவு அல்லது கடலை மாவை கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்டாக உருவாக்கவும். இதனை முகத்தில் மாஸ்க்கிட்டு கொள்ளவும். 15 நிமிடங்கள் கழித்து இதனை ஸ்க்ரப் செய்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இது சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை தருகிறது.
காபி மற்றும் லெமன்
காபி பவுடருடன் சிறிது லெமன் ஜூஸ் சேர்த்து, அந்த கலவையை முகத்தில் தடவிக்கொள்ளவும். இதனை அரை மணி நேரம் அப்படியே விடவும். பின்னர் இதனை ஸ்க்ரப் செய்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். பின்னர் முகத்தை மாய்ஸ்சரைஸ் செய்யவும்.
காபி மற்றும் தேன்
உங்கள் சருமத்திற்கு இயற்கையான வேக்ஸ் ஆக தேன் பயன்படுகிறது. காபி பவுடரில், தேன் கலந்து, அந்த கலவையை முகத்தில் தடவி, அது நன்கு உலர்ந்த உடன் ஸ்க்ரப் செய்யவும். இது உங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற முடியை அகற்றுவதுடன், உங்கள் முகத்தை பளபளப்பாகும்.
காபி மற்றும் மஞ்சள்
நீங்கள் ஃபேஷியல் செய்ய விரும்புகிறீர்களானால், காபி பவுடருடன் மஞ்சள் தூள் மற்றும் அரிசு மாவை கலந்து பேஸ்ட் செய்து, அதனை முகத்தில் தடவவும். இதனை கொண்டு மசாஜ் செய்து, ஸ்க்ரப் செய்துகொள்ளவும். இது உங்கள் முகத்திற்கு இன்ஸ்டண்ட் பளபளப்பை கொடுக்கும்.
இந்த பதிவில் உள்ள தகவல்கள் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. உங்கள் சருமம் உணர்திறன் வாய்ந்தவை என்றாலோ, நீங்கள் தோல் சார்ந்த மருத்துவ நிலையில் இருந்தாலோ, தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின்னே இதனை பயன்படுத்தவும்.