ஒரே நைட்டில் முகப்பருக்கு முடிவு கட்டணுமா? தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க!

By Devaki Jeganathan
23 May 2025, 22:57 IST

தேங்காய் எண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது. மேலும், இதில் லாரிக் அமிலம் உள்ளது. இது பூஞ்சை தொற்றை நீக்குகிறது. முகப்பருவை நீக்க தேங்காய் எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம்.

எப்படி பயன்படுத்துவது?

தேங்காய் எண்ணெயை நேரடியாக முகத்தில் தடவலாம். 2 முதல் 3 சொட்டு தேங்காய் எண்ணெயில் உங்கள் முகத்தை மசாஜ் செய்யவும். இப்படி செய்வதன் மூலம் சரும எரிச்சல், அரிப்பு மற்றும் புள்ளிகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.

அலோ வேரா ஜெல்

முகத்தில் உள்ள முகப்பரு மற்றும் பரு தழும்புகளை நீக்க, கற்றாழை ஜெல்லை தேங்காய் எண்ணெயில் கலந்து முகத்தில் தடவவும். பின்னர், 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.

டீ ட்ரீ ஆயில்

முகப்பருவைப் போக்க, தேங்காய் எண்ணெயுடன் 2 முதல் 3 துளிகள் டீ ட்ரீ ஆயில் கலந்து முகத்தில் தடவலாம். 7 முதல் 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும்.

காஃபி தூள்

1 டீஸ்பூன் காபி தூளுடன் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். அதை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். இது கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.

மஞ்சள்

1 சிட்டிகை மஞ்சளில் 2 முதல் 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து முகத்தில் தடவவும். பின் 5 நிமிடம் கழித்து வெற்று நீரில் முகத்தை கழுவவும். முகப்பருவை நீக்குவது மட்டுமின்றி, சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது.

பேக்கிங் சோடா

1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் கலந்து பேஸ்ட் செய்யவும். பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 10-15 நிமிடங்கள் உலர விட்டு, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.