உதடுக்கு தேங்காய் எண்ணெயை எப்படி அப்ளை பண்ணனும் தெரியுமா?

By Karthick M
12 Dec 2024, 20:36 IST

உதடுகளைப் பராமரிக்க உதடுகளுக்கு தேங்காய் எண்ணெய் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்.

வறண்ட சருமத்திற்கு சிகிச்சையளிப்பதுடன், உதடு வெடிப்பு, உலர்ந்த உதடு போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க தேங்காய் எண்ணெய் உதவுகிறது.

உதடுகளுக்கு தேங்காய் எண்ணெயை ஓரிரவு முழுவதும் வைப்பது உதடுகளை ஈரப்பதமாக்குவதற்கும், நீரேற்றமாக வைப்பதற்கும் உதவுகிறது.

சருமத்தின் மூன்று தோல் அடுக்குகளையும் ஊடுருவிச் செல்லும் பண்புகளை தேங்காய் எண்ணெய் கொண்டுள்ளது. எனவே உதடுகளுக்கு மிகவும் நல்லது.

கருமையான உதடுகள் நீங்கவும், உடனடி பிரகாசம் பெறவும், உதடு வெடிப்புகள் குறையவும் தேங்காய் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.