முகம் சுருக்க சுருக்கமா இருக்கா? சியா விதைகளை இப்படி அப்ளை பண்ணுங்க

By Gowthami Subramani
09 May 2024, 09:00 IST

சியா விதைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், சரும ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. முகத்தில் காணப்படும் சுருக்கங்களை எளிதில் நீக்க சியா விதையை எப்படி பயன்படுத்தலாம்?

ஊட்டச்சத்துக்கள்

சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மக்னீசியம், துத்தநாகம், ஆக்ஸிஜனேற்றிகள் போன்றவை அதிகளவில் உள்ளது. எனவே இவை ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்தை பராமரிக்க உதவுகிறது

சியா விதை எண்ணெய்

இதில் ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இது சருமத்தை சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும், நெகிழ்ச்சித் தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது

சியா விதை ஃபேஸ்பேக்

அரைத்த சியா விதைகளை தண்ணீர் அல்லது கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து பேஸ்ட்டை உருவாக்கி அதை ஃபேஸ் பேக்காக பயன்படுத்தவும். இது சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தருகிறது. இதை சருமத்தில் 15-20 நிமிடங்கள் விட்டு பின் கழுவுவது சருமத்திற்கு ஊட்டமளிக்கவும், முகச்சுருக்கங்களை மறைக்கவும் உதவுகிறது

சியா விதை ஃபேஸ் சீரம்

சியா விதை எண்ணெயை ஆர்கான் அல்லது ரோஸ்ஷிப் எண்ணெய் போன்ற பிற ஊட்டமளிக்கும் எண்ணெய்களுடன் சேர்த்து ஃபேஸ் சீரமாக தயார் செய்யலாம். படுக்கைக்கு முன் முகம் மற்றும் கழுத்தில் இந்த சீரம் சில துளிகள் தடவி ஓர் இரவில் வைத்திருப்பது சருமத்திற்கு ஊட்டமளித்து நன்மையைத் தருகிறது

சியா விதை ஸ்க்ரப்

சியா விதைகளை ஓட்மீல் அல்லது சர்க்கரைமற்றும் சிறிது தயிர் அல்லது தேன் சேர்த்து கலந்து மென்மையான எக்ஸ்ஃபோலியேட்டிங் ஸ்க்ரப்பை உருவாக்க வேண்டும். பின் இந்த ஸ்க்ரப்பை வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்வது, சருமத்தில் இறந்த செல்களை அகற்றுகிறது

சியா விதை பானம்

தண்ணீர் அல்லது பிடித்த பானத்தில் சியா விதைகளைச் சேர்த்து அருந்துவது உடலின் உள்ளே இருந்து நீரேற்றமாக வைக்க உதவுகிறது. சியா விதைகளை தண்ணீரில் ஊறவைக்கும் போது, உடலில் ஈரப்பதத்தைத் தக்கவைப்பதுடன், சருமத்தை நீரேற்றமாக வைக்கவும் உதவுகிறது

இவ்வாறு சியா விதைகளை பயன்படுத்துவது சருமத்தை நீரேற்றமாக வைப்பதுடன், சுருக்கங்களை நீக்க உதவுகிறது