முகத்தைப் பொலிவாக வைக்க சந்தனத்தைப் பலரும் பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம். சந்தனத்தில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்தை பளபளப்பாக வைப்பதுடன், சரும பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. சருமத்திற்கு சந்தனப் பொடியை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து காண்போம்
சந்தன ஃபேஸ்பேக்
சந்தன பொடியுடன் பால் அல்லது ரோஸ் வாட்டரைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் வைத்து பின் காய்ந்ததும் கழுவி விடலாம். இவை சருமத்தின் துளைகளைச் சுத்தம் செய்ய உதவுகிறது
சந்தன டோனர்
சந்தனத்தை நீரில் கலந்து டோனராகப் பயன்படுத்தலாம். இவ்வாறு பயன்படுத்துவது சருமத் துவாரங்களை சுருங்கச் செய்து, சருமத்தில் இயற்கை எண்ணெயைத் தக்க வைக்கிறது
சந்தனத்தூள்
சந்தனப் பொடியுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் சர்க்கரையை சேர்த்து கலக்க வேண்டும். இதை ஸ்க்ரப்பாக பயன்படுத்தலாம். இவை சருமத்தில் இறந்த செல்களை நீக்கி மென்மையாக மற்றும் பளபளப்பாக மாற்றுகிறது
சந்தன சீரம்
சந்தன சீரத்தை சருமத்திற்கு தடவுவதன் மூலம் சருமத்தை பளபளப்பாக வைப்பதுடன் தழும்புகளைக் குறைக்கிறது. இதற்கு சந்தப் பொடியைக் கலந்து பயன்படுத்தலாம்
சந்தன சன்ஸ்கிரீன்
சந்தனப் பொடியை கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து தடவலாம். இது இரு இயற்கையான சன்ஸ்கிரீனாக செயல்படுகிறது மற்றும் புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது
முதுமை எதிர்ப்புக்கு சந்தன ஃபேஸ்பேக்
சந்தன பொடியுடன் தயிர், தேன் கலந்து கலவையாக தயாரித்து ஃபேஸ் பேக்காக அப்ளை செய்வது முதுமை எதிர்ப்புக்கு உதவுகிறது. சந்தனத்தில் பல ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளதால், இவை சருமத்தை பளபளப்பாக மற்றும் இயற்கையாக வைத்திருக்க உதவுகிறது
முகப்பரு நீங்க
சந்தனத்தில் சில துளிகள் தேயிலை மர எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டை உருவாக்கவும். இதை பருக்கள் மற்றும் முகத்தின் சிவந்த தோலில் தடவி, சருமத்தை குளிர்விப்பதன் மூலம் முகப்பருவை குணப்படுத்துகிறது
குளிப்பதற்கு சந்தனம்
குளிக்கும் நீரில் சில துளிகள் சந்தன எண்ணெய் அல்லது சந்தன சிப்ஸ் சேர்த்து குளிக்கலாம். இது சருமத்தை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது
இது போன்ற வழிகளில் சருமத்தை பளபளப்பாகவும். பொலிவாகவும் வைத்திருக்கலாம். எனினும் ஒவ்வாமை பிரச்சனை கொண்டவர்கள், சந்தனத்தைப் பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது