நெற்றியில் ஏற்படும் கருமையுடன் நீங்களும் சிரமப்படுகிறீர்கள் என்றால், சில வீட்டு வைத்தியங்களின் உதவியுடன் இந்த பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
வெள்ளரிக்காய்
நெற்றியில் உள்ள கருமை நீங்க, வெள்ளரிக்காய் சாறை நெற்றியில் தடவி உங்கள் கைகளால் மென்மையாக மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து தண்ணீரில் முகத்தைக் கழுவவும். இவ்வாறு செய்வதால் உங்கள் நெற்றியில் உள்ள சருமம் சுத்தமாகி கருமை நீங்கும்.
பச்சை பால்
நெற்றியில் உள்ள கருமையை நீக்க, ரோஸ் வாட்டரில் பாலை கலந்து இரவு தூங்குவதற்கு முன் நெற்றியில் தடவவும். இதை இரவில் முழுவதும் அப்படியே விடவும். பின், காலையில் தண்ணீரில் முகத்தைக் கழுவவும். இப்படி தினமும் செய்து வந்தால், சில நாட்களில் வித்தியாசத்தைப் பார்க்க முடியும்.
பாதாம் எண்ணெய்
நெற்றியில் உள்ள கருமையை நீக்கப் பாதாம் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதற்கு, ஒரு பாத்திரத்தில் பாதாம் எண்ணெய், தேன் மற்றும் பால் பவுடரை ஒன்றாகக் கலக்கவும். இப்போது இந்தக் கலவையை உங்கள் நெற்றியில் தடவி உலர விடவும். பின்னர் தண்ணீரில் முகத்தைக் கழுவவும். இப்படி தினமும் செய்து வந்தால் சில நாட்களில் நெற்றியில் உள்ள கருமை குறையும்.
மஞ்சள்
நெற்றியில் உள்ள கருமையை நீக்க மஞ்சளைப் பயன்படுத்தலாம். நெற்றியில் உள்ள கருமையை நீக்க வேண்டுமானால், பச்சை பாலில் மஞ்சள் கலந்து நெற்றியில் தடவவும். சுமார் 20 நிமிடங்கள் கழித்து, கைகளால் அதை மென்மையாகத் துடைத்து எடுக்கவும். இவ்வாறு செய்வதால் உங்கள் நெற்றியில் உள்ள சருமம் சுத்தமாகும்.
பெருஞ்சீரகம்
தினமும் இரவு உணவுக்குப் பின், ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகத்தை சாப்பிட்டு வந்தால், சில நாட்களில் நெற்றியில் உள்ள கருமை நீங்கிவிடும். சமையலுக்கு பயன்படுத்தும் இனிப்பு சேர்க்காத பெருஞ்சீரகத்தை சாப்பிடுங்கள்.