குளிர்காலத்தில் இருந்து சருமத்தை காக்க எளிய வழிகள்!

By Ishvarya Gurumurthy G
06 Dec 2023, 12:24 IST

குளிர்காலத்தில் ஏற்படும் காற்றில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க வழி தேடுகிறீர்களா? இந்த பதிவில் உள்ள குறிப்புகளை பின்பற்றவும்.

மாய்ஸ்சரைஸ் செய்யவும்

உங்கள் சருமத்தை காக்க ஹைட்ரேட்டிங் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். இது குளிர்காலங்களில் ஏற்படும் சரும சேதத்தை தடுக்க உதவும்.

பாதுகாப்பு கவசங்கள்

உங்கள் சருமத்தை குளிர்ச்சியிலிருந்து பாதுகாக்க ஸ்கார்வ்கள், தொப்பிகள் மற்றும் மாஸ்க்கை பயன்படுத்தவும்.

சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்

குளிர்காலத்தில் கூட புற ஊதா கதிர்கள் காரணமாக தோல் பாதிப்பு ஏற்படலாம். வெளியில் இருக்கும்போது SPF உடன் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள்.

மென்மையான க்ளீன்சர்

உங்கள் உடலில் அதிக வறட்சி ஏற்படாதவாறு மென்மையான மற்றும் வாசனையற்ற கிளீனர்களைத் தேர்ந்தெடுங்கள்.

ஈரப்பதமூட்டும் மாஸ்க்

நாள் முடிவில் ஆழமான ஈரப்பதமூட்டும் மஸ்க்களை பயன்படுத்தவும். இது குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை காக்க உதவுகிறது.

ஆரோக்கியமான உணவு

ஒமேகா-3 மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகள் உண்ணுங்கள். அவை ஆரோக்கியமான சருமத்திற்கு அவசியமானவை.