என்றும் இளமையுடன் ஜொலிக்க... வீட்டிலேயே ஃபேஸ் வாஷ் தயாரிக்கலாம் வாங்க!
By Kanimozhi Pannerselvam
27 Jan 2024, 15:52 IST
கடலை மாவு
கடலை மாவு ஃபேஸ் வாஷ் தயாரிக்க, கொண்டைக்கடலை மாவுடன் ஒரு சிட்டிகை மஞ்சளை கலந்து, ரோஸ் வாட்டர் அல்லது தயிர் சேர்த்து பேஸ்ட் செய்யவும். இதனை முகத்தில் தடவி சிறிது காய வைத்து பின் தண்ணீரில் கழுவவும்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் தடவி அல்லது தயிருடன் கலந்து முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைக்கவும். ஈரப்பதமும் பிரகாசமும் அப்படியே இருக்கும்.
ஒரு கப் கற்றாழை ஜெல்லுடன், கொண்டைக்கடலை மாவு கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்யவும். இந்த கலவையை முகத்தில் 10-15 நிமிடங்கள் விட்டுவிட்டு சாதாரண நீரில் கழுவினால் முகம் பிரகாசிக்கும்.
துளசி
துளசி இலைகளை கழுவி அரைக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து, இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவவும். சுமார் 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும்.
ஓட்ஸ்
ஓட்ஸ் 1/4 கப், கடலை மாவு 1/2 கப், 2 ஸ்பூன் பாதாம் , லாவண்டர் ஆயில் சில துளிகள், 1 ஸ்பூன் மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் அளவிற்கு முகத்தில் தடவி கழுவி வந்தால் சருமத்தின் பிரகாசம் அதிகரிப்பதை கண்கூடாக காணலாம்.