சருமத்தை பளீச்சென மாற்றும் பீட்ரூட் மாஸ்க்; வீட்டிலேயே செய்வது எப்படி?

By Kanimozhi Pannerselvam
24 Dec 2023, 19:56 IST

தேவையான பொருட்கள்

பீட்ரூட் மாஸ்க்கை உருவாக்க, ஒரு சிறிய பீட்ரூட், ஒரு டீஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் ஆகிய 4 எளிமையான பொருட்கள் மட்டுமே தேவை.

பீட்ரூட்

ஒரு சிறிய பீட்ஸை வெட்டி, மென்மையாகும் வரை கொதிக்க வைக்கவும். பின்னர் ஒரு கிரீமியான பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளவும்.

செய்முறை

ஒரு கிண்ணத்தில் அரைத்து வைத்த பீர்ரூட் உடன் ஒரு டீஸ்பூன் தயிர், ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலக்கவும். ஒரு மென்மையான பேஸ்ட் உருவாகும் வரை கலக்கவும்.

அப்ளே செய்வது எப்படி?

ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் முகத்தை நன்கு கழுவுங்கள். பின்னர் சுத்தமான விரல்கள் அல்லது பிரஸ் மூலம் பீட்ரூட் பேஸ்ட்டை முகத்தில் சீராக பூசவும். கண்களுக்கு கீழ் நேரடியாகப் பயன்படுத்த வேண்டாம்.

மாஸ்கிற்கான நேரம்

மாஸ்க்கை உங்கள் முகத்தில் 15-20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். ஓய்வெடுக்க இந்த நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். 20 நிமிடங்களுக்குப் பிறகு மாஸ்க்கை அகற்றி, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். பின்னர் உங்கள் முகத்தை ஒரு மென்மையான துண்டு கொண்டு துடைத்தெடுக்கவும்.

எத்தனை முறை பயன்படுத்தலாம்?

பின்னர் ஈரப்பதத்தை தக்கவைக்க வழக்கமான மாய்ஸ்சரைசரை தடவவும். இந்த மாஸ்க்கை மாதத்திற்கு இரண்டு முறை தடவினால் சிறந்த பலன் கிடைக்கும்.