காய்கறிகள் மூலம் இந்த பேஸ் பேக் செய்து முகத்தில் தடவுங்கள்!

By Karthick M
29 Mar 2024, 23:16 IST

காய்கறி ஃபேஸ்பேக்

காய்கறிகளில் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இவை சருமத்திற்கும் நேரடியாக பல பலன்களை தருகிறது. காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக்குகள் குறித்து பார்க்கலாம்.

பீட்ரூட் ஃபேஸ் மாஸ்க்

பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது கருவளையங்களை குணப்படுத்துகிறது. இதற்கு பீட்ரூட் பேஸ்டில் ரோஸ் வாட்டர் மற்றும் தயிர் கலந்து தடவவும்.

உருளைக்கிழங்கு ஃபேஸ் மாஸ்க்

உருளைக்கிழங்கு சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது கருவளையம் மற்றும் பருக்களில் இருந்து நிவாரணம் அளிக்கும். இது ஆண்டி ஏஜிங் பண்புகளை கொண்டுள்ளது. உருளைக்கிழங்கை அரைத்து இந்த சாற்றை முகம் மற்றும் கழுத்தில் தடவவும்.

வெள்ளரி ஃபேஸ் மாஸ்க்

வெள்ளரிக்காய் ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் நன்மை பயக்கும். இது சருமத்தை குளிர்விப்பதோடு முக பொலிவையும் கொடுக்கும். இது துண்டுகளாக நறுக்கி அல்லது சாறு எடுத்து முகத்தில் தடவவும்.

கேரட் ஃபேஸ்மாஸ்க்

கேரட் சாறு எடுத்து சிறிது உளுத்தம் மற்றும் பச்சை பால் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவலாம். இதில் நல்ல அளவு வைட்டமிம் ஏ மற்றும் சி உள்ளது. இது முகப்பரு பிரச்சனைக்கு நிவாரணம் அளிக்கும்.

தக்காளி ஃபேஸ்மாஸ்க்

தக்காளியில் ஏராளமான ஆன்டு ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது தோல் சுருக்கங்கள் மற்றும் கறைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். இவை அனைத்தும் சரும ஆரோக்கியத்திற்கு பலனளிக்கும் ஃபேஸ்மாஸ்க் ஆகும்.