அக்குள், கழுத்து, உதட்டில் உள்ள கருமையை போக்க எளிமையான வீட்டு வைத்தியம்!
By Kanimozhi Pannerselvam
03 Feb 2024, 07:53 IST
உதடுகளுக்கு
உதடுகள் மிகவும் கருப்பாக இருந்தால், ஒரு ஸ்பூன் தேனில் அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து இரண்டையும் கலந்து ஸ்க்ரப் போல் தயார் செய்யவும். இதை உதடுகள் மீது தேய்த்து, 5 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவவும். அதன் பின்னர், உதடுகளை மாய்ஸ்சரைசாக வைத்துக்கொள்ள பாதாம் எண்ணெயை தடவவும். இந்த ஸ்க்ரப்பை வாரத்திற்கு 2-3 முறைக்கு மேல் பயன்படுத்த கூடாது.
அக்குள் கருமையை அகற்ற
அக்குள் கருமை என்பது மிகவும் பொதுவானது, அதை போக்க அனைத்து விதமான கிரீம்கள் மற்றும் ஜெல்களும் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் நீங்கள் இயற்கையான வழியை விரும்பினால், உருளைக்கிழங்கை தோல் சீவி அதனை அக்குள்களில் தேய்ப்பதன் மூலமாக கருமையை போக்கலாம்.
உருளைக்கிழங்கில் ப்ளீச்சிங் ஏஜெண்டுகள் உள்ளன, அவை சருமத்தின் கருமையை போக்கி ஒளிரச்செய்கிறது. உருளைக்கிழங்கில் சில துளிகள் எலுமிச்சை சேர்த்து, உங்கள் கைகளால் மசாஜ் செய்து, 15 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரில் கழுவவும்.
கற்றாழை
இருக்க கவலை ஏன் அலோ வேரா ஜெல் சருமத்தின் மெலனின் விளைவை சமநிலைப்படுத்தக்கூடியது. கற்றாழை ஜெல்லை கைகள் மீது தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவுவம். இதனை அடிக்கடி செய்து வந்தால் நல்ல பலன்களை அடையலாம்.
தேன்+தயிர்+எலுமிச்சை காம்போ
உதடுகளைச் சுற்றியுள்ள தோல், காதுகளுக்கு அருகில், நெற்றியில் தோன்றும் கருமையைப் போக்க தேன், தயிர் மற்றும் எலுமிச்சை தேவைப்படும். இவை மூன்றையும் கலந்து தயாரித்த பேஸ்ட்டை சருமையாக இருக்கும் இடங்களில் தடவி சிறிது காய்ந்ததும் தண்ணீரில் கழுவவும்.
எலுமிச்சை
முழங்கை மற்றும் முழங்கால்களின் கருமையை நீக்க எலுமிச்சை போதுமானது. எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன்மையும் உள்ளது. எலுமிச்சை பழத்தை எடுத்து முழங்கை மற்றும் முழங்கால்களில் தேய்த்தால் போதும். 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.