ஆரோக்கியமான நகம் வேண்டுமா? - இந்த குறிப்புகள பாலோப் பண்ணுங்க!
By Kanimozhi Pannerselvam
06 Mar 2024, 23:53 IST
பூண்டு
பூண்டு நல்லது. இதில் செலினியம் உள்ளது. இது நகங்களுக்கு நல்லது. பூண்டை நசுக்கி, தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் கலந்து நகங்களில் தடவவும்.
தேயிலை எண்ணெய்
தேயிலை மர எண்ணெயில் பூஞ்சை காளான் பண்புகள் உள்ளன. நகங்களில் ஏற்படும் பூஞ்சை தொற்றுகளைத் தடுப்பதற்கும் இது நல்லது. இதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து நகங்களில் மசாஜ் செய்யவும்.
பயோட்டின் கொண்ட முட்டை, பருப்புகள், முழு தானியங்கள், வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை உண்ணுங்கள்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் கொண்டு நகங்களை மசாஜ் செய்வது பலன் தரும். நகத்தையும், நகத்தைச் சுற்றியிருக்கும் க்யூட்டிகல் பகுதியையும் இதே முறையில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் மசாஜ் செய்யலாம்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறு ஒரு நல்ல தீர்வு. சம அளவு ஆலிவ் எண்ணெயுடன் கலந்து, சிறிது நேரம் அதில் உங்கள் விரலை நனைக்கவும். நகங்களை வலுவாகவும், நகங்களை பளபளப்பாகவும் அழகாகவும் மாற்ற இது நல்லது.