முகத்தில் பருக்கள் தோன்றுவது அழகைக் கெடுப்பதுடன், வலியையும் உண்டாக்கலாம். இதன் மூலம் தோன்றும் தழும்புகள் முகத்தின் அழகைக் கெடுத்து விடும். ஒரே இரவில் முகப்பருக்களை நீக்க உதவும் இயற்கை பொருள்கள் சிலவற்றைக் காணலாம்
தேன்
சரும பிரச்சனைகளைப் போக்குவதில் தேன் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் ஈரப்பதமூட்டும் பண்புகள் தோல் வியாதிகளை குணப்படுத்துவதுடன், சருமத்தின் அழகைப் பராமரிக்க உதவுகிறது
கிரீன் டீ
இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் காணப்படுகின்றன. இது சருமத்தை குணப்படுத்தவும், சரும ஆரோக்கியத்தை மீள் உருவாக்கம் செய்யவும் உதவுகிறது. இதன் ஆக்ஸிஜனேற்ற அழுத்த பண்புகள் செல்கள் அழிப்பதைத் தடுக்க உதவுகிறது
தேனுடன் இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. இவை முகப்பருக்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. இலவங்கப்பட்டையுடன் தேன் கலந்து பயன்படுத்தலாம்
எலுமிச்சைச் சாறு
இதில் வைட்டமின் சி காணப்படுகிறது. இது சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, பருக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது
ஐஸ்கட்டி
ஐஸ்கட்டிகளை முகத்தில் உள்ள பருக்களின் மீது ஒத்தடம் கொடுத்து வர பருக்களை விரட்டலாம். இது சருமத்தை உலர்த்தி பருக்களை நீக்குகிறது
கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லின் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் முகப்பருவை நீக்க உதவும் சிறந்த தீர்வாகும். இதன் ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் முகப்பருவை எதிர்த்துப் போராட உதவுகிறது
இந்த பொருள்களைப் பயன்படுத்தி வீட்டிலேயே எளிமையான முறையில் பருக்களை நீக்கலாம். எனினும் சருமம் உணர்திறன் மிக்கது என்பதால் இந்த பொருள்களைப் பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது