1 வாரத்தில் முகப்பரு காணாமல் போகும்.. பெஸ்ட் வீட்டு வைத்தியம்!

By Karthick M
24 Jan 2024, 00:04 IST

முகப்பரு தீர்வு

ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது சருமத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இது மனஅழுத்தம், ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதனால் தோல் பிரச்சனைகளும் ஏற்படும். இதை சரிசெய்யும் வீட்டு வைத்தியத்தை பார்க்கலாம்.

மஞ்சள் மற்றும் பால்

ஆயுர்வேத பண்புகள் நிறைந்த மஞ்சள் முகத்தில் உள்ள கறைகளை குறைக்க உதவுகிறது. இதற்கு 2 ஸ்பூன் மஞ்சளுடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்யவும். இதை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவவும்.

சிவப்பு ஃபேஸ் மாஸ்க்

ஊறவைத்த பருப்பை பேஸ்ட் செய்து முகத்தில் தடவவும். காய்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை நன்கு கழுவவும். இது முகப்பருவை குறைக்க உதவுகிறது.

தேன்

பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்த தேன், சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். முகப்பருவை குறைக்க 2 ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து சாறு செய்து முகத்தில் தடவவும்.

தக்காளி

தக்காளி இயற்கையான ப்ளீச்சிங் தன்மை கொண்டது. இது தழும்புகளை குறைக்க உதவுகிறது. தக்காளியை மசித்து சாறு செய்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து கழுவவும்.

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகரை தண்ணீரில் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவவும். இதை முகத்தை தடவினால் முகப்பரு குறையும்.

அலோவெரா ஜெல்

அலோவெரா ஜெல் ஒரு இயற்கை மாய்ஸ்சரைசர். கற்றாழை ஜெல்லை இரவு முழுவதும் முகத்தில் விட்டு காலையில் தண்ணீரில் கழுவவும்.

முழுமையாக படித்ததற்கு நன்றி

சுருக்கங்களையும் பருக்களையும் போக்க இந்த வீட்டு வைத்தியங்கள் பெரிதளவு உதவியாக இருக்கும். ஆரோக்கியம் தொடர்பான தகவல்களுக்கு OnlyMyHealth உடன் இணைந்திருங்கள்.