அழகான சருமத்தை பெறுவதே அனைவரின் நோக்கமாக திகழ்கிறது. இயற்கையான முறையில் அழகான சருமத்தை பெறுவது எப்படி என்று இங்கே காண்போம்.
ஆரோக்கியமான மற்றும் அழகான சருமம் என்பது அனைவரின் விருப்பம். இதை பெறுவதற்காக வேதிப்பொருள்கள், இரசாயனம் கலந்த ஒப்பனைப் பொருள்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இது சரும ஆரோக்கியத்தை பாதிக்கும்.
சில இயற்கை முறைகளைக் கையாள்வதன் மூலம் பக்க விளைவுகள் ஏதும் இல்லாத சருமப் பொலிவைப் பெறலாம். சருமப் பொலிவை மேம்படுத்த உதவும் சில வீட்டு வைத்திய முறைகளை இங்கே காண்போம்.
கற்றாழை
சரும பிரச்னைகளைத் தீர்ப்பதில் கற்றாழை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கற்றாழையின் ஜெல்லை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் நன்கு தடவி, இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும். காலை எழுந்த பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும்.
ஈரப்பதமாக இருக்கவும்
சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, முகத்தைப் பொலிவுடன் வைத்திருக்க வேண்டும். அதே போல அசுத்தங்களை நீக்குவதற்கு லேசான மற்றும் மென்மையான ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது நல்லது. இதன் மூலம் வறண்ட சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க முடியும்.
ஃபேஸ் ஸ்க்ரப்
முக ஸ்க்ரப்பைப் பயன்படுத்தி இறந்த செல்களை வெளியேற்ற முடியும். ஃபேஸ் ஸ்க்ரப்பைப் பயன்படுத்துவது, சருமத்தை இளமையாகவும், புத்துணர்ச்சியாகவும் மாற்ற உதவுகிறது.
தண்ணீர் குடிக்கவும்
அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்வதன் மூலம், முகத்தில் வறண்ட சருமத்தை நீக்கி, மென்மையான சருமத்தைப் பெற முடியும். அதிக அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் முகத்தில் சுருக்கம், முதிர்ச்சி போன்றவை ஏற்படுவதையும் தவிர்க்க முடியும்.
காய் மற்றும் பழம் சாப்பிடவும்
சில இயற்கையான உணவுப் பொருள்களை எடுத்துக் கொள்வதன் மூலம் முகப்பொலிவை மேம்படுத்த முடியும். உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதால் தோல் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
உடற்பயிற்சி
உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் முகப் பொலிவிற்கும் உடற்பயிற்சி அல்லது யோகா முக்கிய பங்காற்றுகிறது. மிகக்குறைந்த வயதில் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை போக்க யோகா அல்லது உடற்பயிற்சி உதவுகிறது.