கொளுத்தும் வெயிலில் முகம் பளிச்சினு இருக்கணுமா? இதெல்லாம் ட்ரை பண்ணுங்க

By Gowthami Subramani
15 Apr 2024, 17:23 IST

கோடைக்காலத்தில் சரும பராமரிப்பு என்பது வழக்கமான ஒன்று. இந்த காலத்தில் முகத்தைப் பொலிவாக வைக்க சில வீட்டு வைத்திய முறைகளைக் கையாளலாம்

அலோவேரா

குளிர்ச்சி மிகுந்த அலோவேராவை பயன்படுத்துவதன் மூலம் சருமத்தைப் பொலிவாக்கலாம். இது செல் மீளுருவாக்கத்திற்கும், துளைகளை அடைக்காமல் சருமத்தை ஈரப்பதமாகவும் வைக்க உதவுகிறது

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இது முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதுடன், ஈரப்பதமாக வைக்கிறது

பால் ஃபேஸ் பேக்

சருமத்திற்கு பச்சைப் பாலை பயன்படுத்துவது சருமத்திற்கு புத்துணர்ச்சியைத் தருகிறது. இதை மசாஜ் செய்து, இரவு முழுவதும் விட்டு காலையில் குளிர்ந்த நீரில் கழுவி வர சரும பொலிவைப் பெறலாம்

நீரேற்றமாக வைப்பது

கோடைக்காலத்தில் சருமத்தை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியமாகும். எனவே, சரும செல்கள் நன்றாக செயல்பட போதுமான தண்ணீர் குடிப்பது அவசியமாகும். தண்ணீருக்குப் பதிலாக பழச்சாறுகளையும் எடுத்துக் கொள்ளலாம்

ரோஸ் வாட்டர்

சருமத்தின் உள்ளே ஆழமாக புகுந்து ஈரப்பதமூட்டுவதற்கு ரோஸ் வாட்டர் உதவுகிறது. இதற்கு ரோஸ் வாட்டரை டோனராக அல்லது ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம்

தேன், மஞ்சள் ஃபேஸ்பேக்

மஞ்சளுடன் தேன் கலந்து ஃபேஸ் பேக்காக பயன்படுத்துவது சருமத்திற்கு புத்துணர்ச்சியைத் தருகிறது. இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவி பின் கழுவி விடலாம்

முகத்திற்கு தயிர்

தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் கருவளையங்களைக் குறைக்க உதவுகிறது. மேலும், வெயிலிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கவும், முகப்பருவைத் தடுக்கவும் வாரம் இருமுறை தயிர் ஃபேஸ்பேக் பயன்படுத்தலாம்