ரெட் ஒயின் ஃபேஷியல் செய்வதால் நம் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? இதனை வீட்டிலேயே செய்வது எப்படி என்று இங்கே காண்போம்.
சருமத்தை மேம்படுத்தும்
சரும பராமரிப்பில் ரெட் ஒயின் சேர்த்து வந்தால், சரும சேதம் ஏற்படாது. மேலும் இது சரும அலர்ஜியை தடுக்கிறது.
நிறம் மேம்படும்
மாசுபாடு காரணமாக சருமம் சோர்வாக காணப்படும். இதனை குணப்படுத்த ரெட் ஒயின் ஃபேஷியல் செய்யவும்.
பருக்கள் நீங்கும்
ரெட் ஒயின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது முகப்பரு பிரச்னையை தீர்க்கிறது.
க்ளன்ஸ் செய்யவும்
முகத்தை பஞ்சியை கொண்டு நன்கு துடைத்துக்கொள்ளவும். பின் ரெட் ஒயினில் லெமன் ஜூஸ் சேர்த்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். பின்னர் இதனை காட்டன் கொண்டு துடைக்கவும்.
ஸ்க்ரப்பர்
அரிசி மாவுடன் ரெட் ஒயிம் சேர்த்து முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்யவும். இது சருமத்தில் உள்ள இறந்த செற்களை நீக்குகிறது.
ஃபேஸ் பேக்
தயிர், தேன் மற்றும் ரெட் ஒயின் சேர்த்து ஃபேஸ் பேக் செய்துகொள்ளவும். 15 நிமிடங்களுக்கு பிறகு இதனை அகற்றவும். இது உங்கள் சருமத்தை ஒளிரச் செய்யும்.