மந்தமான சருமத்தை பொலிவாக்க உதவும் சூப்பர் ரெமிடிஸ்

By Gowthami Subramani
12 Aug 2024, 13:30 IST

வறண்ட மற்றும் மந்தமான சருமத்தை பலரும் கையாள்கின்றனர். இதற்கு பலரும் முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளைக் குறைக்க விரும்புகின்றனர். இதில் மந்தமான சருமத்தை பொலிவாக்க உதவும் சில வீட்டு வைத்தியங்களைக் காணலாம்

கற்றாழை ஜெல்

கற்றாழை இனிமையான மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதற்கு புதிய கற்றாழை ஜெல்லை நேரடியாக சருமத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் வைத்து, பிறகு கழுவி விடலாம். இது சரும அமைப்பை மேம்படுத்த மற்றும் பிரகாசத்தை மீட்டெடுக்க உதவுகிறது

தயிர் மற்றும் மஞ்சள் ஃபேஸ்பேக்

ஒரு சிட்டிகை அளவு மஞ்சளுடன் வெற்று தயிரைக் கலந்து ஒரு இனிமையான ஃபேஸ்பேக்கைத் தயார் செய்யலாம். இந்த ஃபேஸ்பேக்கைத் தடவி 10-15 நிமிடங்கள் வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். இது முகப்பரு அபாயத்தைக் குறைக்க உதவுகிறது

எலுமிச்சை மற்றும் தேன் ஃபேஸ்பேக்

தேனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து, கலவையை முகத்தில் தடவ வேண்டும். இதை சுமார் 10-15 நிமிடங்கள் வைத்து பின்னர் கழுவி விடலாம். எலுமிச்சை சாற்றில் வைட்டமின் சி உள்ளதால் இது சருமத்தை ஒளிரச் செய்து கரும்புள்ளிகளை குறைக்கவும், தேன் சருமத்தை நீரேற்றமாக வைக்கவும் உதவுகிறது

கிரீன் டீ டோனர்

ஒரு கப் க்ரீன் டீயை காய்ச்சி, ஆற வைத்து பின் டோனராகப் பயன்படுத்தலாம். இதை சுத்தப்படுத்திய பிறகு முகத்தில் காட்டன் பேட் மூலம் தடவலாம். கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை சருமத்தை புத்துயிர் பெறவும், சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது

பால் மற்றும் ஓட்ஸ் ஃபேஸ்பேக்

ஓட்மீலை பாலுடன் சேர்த்து மென்மையான எக்ஸ்ஃபோலியேட்டிங் ஸ்க்ரப் செய்யலாம். இதனை வட்ட இயக்கங்களில் சருமத்தில் ஸ்க்ரப்பை மசாஜ் செய்ய வேண்டும். பிறகு இதை கழுவி விடலாம். ஓட்மீல் இறந்த சரும செல்களை அகற்றவும், சருமத்தை ஆற்றவும் உதவுகிறது