அரிசி தண்ணீர் மட்டும் போதும்! தழும்புகள், கரும்புள்ளிகள் க்ளோஸ்!

By Karthick M
28 Feb 2024, 14:43 IST

அரிசி தண்ணீர் நன்மைகள்

அரிசியை போலவே இதன் தண்ணீரும் ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். உங்கள் முகத்தில் அரிசி நீரை சில வித்தியாசமான வழிகளில் தடவலாம். அது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

சத்துக்கள் நிறைந்தது

அரிசி நீரில் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இதில் இரும்பு, நார்ச்சத்து, அமினோ அமிலங்கள், வைட்டமின் பி, சி மற்றும் ஈ, நியோமைசின், தயாமின் போன்ற பண்புகள் உள்ளது. இதை எப்படி கலந்து பயன்படுத்தலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

கடலை மாவு

அரிசி தண்ணீர் மற்றும் உளுந்து மாவு கலந்து முகத்தில் தடவலாம். இதற்கு அரிசி நீரில் உளுத்தம்பருப்பு மற்றும் மஞ்சள் கலக்க வேண்டும். இதை உங்கள் முகத்தில் தடவவும். இதன்மூலம் சருமம் ஈரப்பதமாகுவதுடன் கறைகளில் இருந்து பாதுகாக்கும்.

மாவு

அரிசி மாவை அரிசி நீரில் கலந்து தடவலாம். இதற்கு அரிசி மாவு மற்றும் காபி பொடியை அரிசி நீரில் கலக்க வேண்டும். இந்த ஸ்க்ரப் மூலம் சருமம் ஆழமாக சுத்தம் செய்யப்பட்டு உங்கள் இயற்கை பொலிவு பெறும்.

முல்தானி மிட்டி

முகத்தில் இயற்கையான பளபளப்புக்கு முல்தானி மிட்டியை அரிசி நீரில் கலந்து தடவலாம். எண்ணெய் பசை சரும பிரச்சனையையும் இந்த பேஸ்ட்டின் மூலம் போக்கலாம். அரிசி நீரைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துக் கொள்ளுங்கள்.

தோல் நிறம்

அரிசி நீரில் நல்ல அளவு அஸ்கார்பிக் அமிலம் உள்ளது. இது தழும்புகள் மற்றும் நிறமிகளை குறைக்கும். இது கொலாஜனை அதிகரித்து முக நிறத்தை மேம்படுத்தும்.

வயதான எதிர்ப்பு பண்புகள்

முதுமையை தடுக்கும் தன்மை அரிசி நீரில் உள்ளது. இது சருமத்தை இருக்கமாக்கும். மேலும் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நல்ல அளவில் உள்ளதால் இயற்கையான பொலிவு இதன்மூலம் கிடைக்கும். இதுபோன்ற பல நன்மைகள் அரிசி நீரில் உள்ளது.