தினமும் இளநீர் குடிப்பது சருமத்திற்கு இவ்வளவு நல்லதா?

By Kanimozhi Pannerselvam
22 Feb 2024, 09:56 IST

தோல் pH

இளநீரில் உள்ள பொட்டாசியம் சருமத்தின் pH ஐ சமப்படுத்த உதவுகிறது. இது தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளை அகற்ற உதவுகிறது.

சருமத்தை பளபளப்பாக்கும்

இது சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்து, சருமத்தை பளபளக்கும். ஆரோக்கியமாக்கும். தோல் சோர்வை நீக்குகிறது.

முகப்பரு

இது முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாவை அழிக்கும் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

சன்டான்

சன்டான் மற்றும் சன் பர்ன் போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் இளநீர் அருமருந்தாகும். இது இயற்கையான டோனராகச் செயல்பட்டு தோல் துளைகளை இறுக்கமாக்குகிறது.

வயதான அறிகுறி

இளநீரில் உள்ள சைட்டோகினின்கள் செல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது. இதன் மூலமாக முகத்தில் விரைவிலேயே கோடுகள் மற்றும் சுருக்கங்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.

தோல் நோய்கள்

இது சொரியாசிஸ், எக்ஸிமா மற்றும் டெர்மடிடிஸ் போன்ற தோல் நோய்களைத் தடுக்க உதவுகிறது. ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து தோல் செல்களைப் பாதுகாக்கிறது.