சுட்டெரிக்கும் வெயிலில் சருமத்தை ஜில்லுனு வைக்க கற்றாழை ஒன்னு போதும்

By Gowthami Subramani
16 Apr 2025, 20:55 IST

கோடை வெப்பத்தின் காரணமாக சருமத்தில் தடிப்புகள், சோர்வு அல்லது எரிச்சலுடன் காணப்படலாம். இதற்கு கற்றாழை ஒரு இயற்கையான தீர்வாக அமைகிறது. இதில் கோடைக்காலத்தில் சருமத்திற்கு கற்றாழை எவ்வாறு உதவுகிறது என்பதைக் காண்போம்

சிவத்தல் மற்றும் வீக்கத்தைக் குறைக்க

கற்றாழையின் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்புகள், வெப்பம் அல்லது அல்லது தோல் ஒவ்வாமையால் ஏற்படும் வீக்கம், எரிச்சல் மற்றும் சிவப்பைக் குறைக்க உதவுகிறது

வெயிலில் தீக்காயத்தைத் தணிக்க

கற்றாழையில் உள்ள ஆரோக்கியமிக்க பண்புகள் வெயிலில் எரிந்த சருமத்தை குளிர்வித்து, ஒரு பாதுகாப்புத் தடையை உருவாக்குகிறது. இது சேதமடைந்த செல்களை நீரேற்றம் செய்வதன் மூலம் குணப்படுத்துவதை துரிதப்படுத்துகிறது

வீங்கிய கண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க

குளிர்சாதன பெட்டியில் கற்றாழை ஜெல்லை குளிர்வித்து கண்களுக்குக் கீழே தடவ வேண்டும். இது வீக்கத்தைக் குறைப்பதுடன், உடனடியாக குளிர்ச்சியான விளைவைத் தருகிறது

வெப்பத் தடிப்புகளை குணப்படுத்த

கற்றாழையின் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை மற்றும் மென்மையான பண்புகள், வெப்பம் அல்லது வியர்வையால் ஏற்படும் தடிப்புகளுக்கு விரைவான தீர்வைத் தருகிறது

க்ரீஸ் இல்லாமல் நீரேற்றம் செய்ய

கோடைக்காலத்திற்கு ஏற்ற வகையில் கற்றாழை சருமத்தை எண்ணெய் பசையாக மாற்றாமல் ஆழமான ஈரப்பதத்தை வழங்குகிறது. குறிப்பாக எண்ணெய் பசை மற்றும் முகப்பரு பாதிப்புக்குள்ளான இது சருமத்திற்கு ஏற்றது