தோல் வறண்டு போனால் என்ன செய்ய வேண்டும்.?

By Ishvarya Gurumurthy G
06 Dec 2024, 09:23 IST

குளிர்காலத்தில், தோல் மற்றும் கூந்தல் தொடர்பான பல பிரச்னைகளை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் சருமம் வறண்டு போகும் போது நீங்கள் பின்பற்ற வேண்டிய குறிப்புகள் என்ன என்பதை இங்கே காண்போம்.

நிறைய தண்ணீர் குடிக்கவும்

சரும வறட்சி பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற, நிறைய தண்ணீர் குடிக்கவும். பெரும்பாலானோர் குளிர்காலத்தில் தண்ணீர் குடிப்பதை குறைத்து விடுவார்கள். தண்ணீர் பற்றாக்குறையால் சருமம் வறண்டு போகும்.

தேங்காய் எண்ணெய்

தினமும் தூங்கும் முன் உங்கள் உடலை தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யவும். இது சருமத்தின் வறட்சியை போக்க உதவும். கூடுதலாக, அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தொற்றுகளை நீக்குகிறது.

தேன்

சரும வறட்சியை போக்க தேனை பயன்படுத்தலாம். இதன் ஆன்டி- பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் சருமத்திற்கு நன்மை பயக்கும்.

கற்றாழை ஜெல்

சருமத்தை இயற்கையாக ஈரப்பதமாக்க, கற்றாழை ஜெல்லைக் கொண்டு மசாஜ் செய்யவும். இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் குறிப்பிடத்தக்கது.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவது சருமத்திற்கு உள் ஈரப்பதத்தைப் பெற உதவுகிறது. இது ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது.

தோல் வறண்டு போகும் போது இவை அனைத்தையும் தடவவும் தோல் பராமரிப்பு தொடர்பான தகவல்களுக்கு, onlymyhealth.comஐப் படிக்கவும்.