சருமத்தைப் பளபளப்பாக்கும் சூப்பர் டிடாக்ஸ் பானங்கள்

By Gowthami Subramani
28 Aug 2024, 08:30 IST

நச்சுகளை வெளியேற்றுவதன் மூலம் உடலில் உள்ள உள் உறுப்புகள் மற்றும் சருமத்தை சுத்தப்படுத்தலாம். இந்த இயற்கையான நீரேற்ற காலை பானங்கள் சிறந்த முடிவுகளைத் தருகிறது

வெதுவெதுப்பான எலுமிச்சை நீர்

வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து எலுமிச்சை நீரை தினமும் உட்கொள்வது சரும நோய்த்தொற்றுக்களைத் தவிர்க்கிறது. மேலும் சருமத்தை புதுப்பித்து ஆரோக்கியமான சரும செல் வளர்ச்சியை ஆதரிக்கிறது

கற்றாழை சாறு

இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நோய்த்தொற்றுக்களைத் தவிர்க்கிறது. இவை கொலாஜன் உற்பத்தி ஊக்குவித்து, சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது

சியா விதைகளுடன் நீர்

சியா விதைகளை தண்ணீருடன் உட்கொள்வது சருமத்தின் பாதுகாப்பு அடுக்கை மேம்படுத்த உதவுகிறது. இந்த பானம் சருமத்திற்கு நீரேற்றத்தைத் தருகிறது. இதில் உள்ள பாலிபினால்கள், துத்தநாகம் போன்றவை புற ஊதாக் கதிர்வீச்சுகளிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது

தேங்காய் தண்ணீர்

தேங்காய் நீரில் உள்ள பொட்டாசியம், கால்சியம் போன்றவை சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையை ஊக்குவித்து, வறட்சியைத் தவிர்க்கிறது. இவை நச்சுக்கள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டை எதிர்த்துப் போராட உதவுகிறது

மஞ்சள் இஞ்சி தண்ணீர்

இந்த கலவையில் ஆக்ஸிஜனேற்ற கலவைகள், ஜிஞ்சரால்கள் போன்றவை உள்ளன. இதன் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் சருமத்தை நோய்த்தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் சுருக்கங்கள் போன்ற வயதான அறிகுறிகளைக் குறைக்கிறது