பல்வேறு காரணங்களால் சருமம் ஈரப்பதத்தை இழந்து வறட்சியடைகிறது. இந்த சூழ்நிலையில் சருமத்திற்கு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம். இதில் வீட்டிலேயே இயற்கையான முறையில் மாஸ்சரைசர் தயாரிப்பு குறித்து காணலாம்
கிளிசரின் மற்றும் தேன்
கிண்ணம் ஒன்றில் 1 தேக்கரண்டி தேன், 2 தேக்கரண்டி கிளிசரின் மற்றும் கற்றாழை ஜெல் சேர்க்கவும். பின் 2 ஸ்பூன் கிரீன் டீ சேர்த்து கலவையைத் தயாரித்து குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்த வேண்டும்
அலோவேரா ஜெல்லுடன் தேன்
பாத்திரம் ஒன்றில் 1 டீஸ்பூன் கற்றாழை, 1 டீஸ்பூன் தேன், அரை டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்த கலவையை பயன்படுத்தலாம்
ரோஸ்வாட்டருடன் கிளிசரின்
2/3 கப் அளவு ரோஸ் வாட்டருடன் 1/3 கப் அளவு கிளிசரின் சேர்த்து பயன்படுத்துவது சருமத்தை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது
ஆலிவ் எண்ணெய் & தேயிலை மர எண்ணெய்
2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, 2 டீஸ்பூன் டீ ட்ரீ ஆயில், 4 டீஸ்பூன் ஆலிவ் ஆயில், 1 கப் அலோவேரா ஜெல் போன்றவற்றை நன்கு கலந்து சருமத்திற்கு பயன்படுத்துவது சருமம் மற்றும் தடிப்புகளில் இருந்து நிவாரணம் தருகிறது
தேனுடன் தேங்காய் எண்ணெய்
கிண்ணம் ஒன்றில் தலா ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், தேன், எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாக கலந்து பயன்படுத்துவது சருமத்தை மென்மையாக வைக்க உதவுகிறது