முகப்பரு வெடிப்பால் அவதியா? இத ட்ரை பண்ணுங்க

By Gowthami Subramani
28 Jan 2025, 17:37 IST

முகப்பரு வெடிப்புகள் மிகவும் அசௌகரியத்தைத் தரக்கூடியதாக இருக்கலாம். எனினும் சருமத்தை இயற்கையாகவே ஆற்றவும் சிகிச்சையளிக்கவும் சில ஃபேஸ் பேக்குகளைக் பயன்படுத்தலாம். இதில் முகப்பரு வெடிப்பை நீக்க உதவும் ஃபேஸ் பேக்குகள் சிலவற்றைக் காண்போம்

அலோவேரா, மஞ்சள் ஃபேஸ்பேக்

கற்றாழை மென்மையான சருமத்தை ஊக்குவிக்கிறது. மேலும், மஞ்சள் அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்காக பெயர் பெற்றதாகும். இதற்கு புதிய புதிய கற்றாழை ஜெல்லை ஒரு சிட்டிகை மஞ்சளுடன் சேர்த்து சருமத்தில் தடவி 15-20 நிமிடங்கள் வைத்து பிறகு கழுவி விடலாம்

ஓட்ஸ், தயிர் ஃபேஸ்பேக்

தயிர் சருமத்திற்கு நீரேற்றத்தைத் தர உதவுகிறது. மேலும் எரிச்சலூட்டும் சருமத்தை அமைதிப்படுத்த ஓட்ஸ் உதவுகிறது. இந்த ஃபேஸ்பேக் தயார் செய்ய வெற்று தயிரில் அரைத்த ஓட்மீல் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்

பப்பாளி, தேன் ஃபேஸ்பேக்

தேன் இயற்கையாகவே சரும ஆரோக்கியத்திற்கு உதவக்கூடியது. பப்பாளியில் உள்ள என்சைம்கள் சருமத்தை உரித்து சுத்தப்படுத்த உதவுகிறது. இதற்கு புதிய பப்பாளியை நசுக்கி அதில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் தடவலாம். இதை 15-20 நிமிடங்கள் விட்டுவிட்டு பிறகு கழுவலாம்

தேன், இலவங்கப்பட்டை ஃபேஸ்பேக்

தேனில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளது. மேலும், வீக்கத்தைக் குறைக்க இலவங்கப்பட்டை உதவுகிறது. இந்த ஃபேஸ் மாஸ்க் தயார் செய்ய, இலவங்கப்பட்டையுடன் ஒரு சிட்டிகை தேன் சேர்த்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 10-15 நிமிடங்கள் வைத்து கழுவி விடலாம்

டீ ட்ரீ ஆயில் ஃபேஸ்பேக்

பருக்களை சரி செய்ய உதவும் பண்புகள் டீ ட்ரீ ஆயிலில் உள்ளது. இவை  சீபம் சுரப்பையும் அதிகப்படியான எண்ணெய் சுரப்பையும் கட்டுப்படுத்துவதன் மூலம் முகப்பருக்களை விரட்டுவதுடன், வராமல் தடுக்கவும் உதவுகிறது

இந்த ஃபேஸ் மாஸ்க்குகள் தயாரிப்பதற்கு எளிதானது மட்டுமல்லாமல், முகப்பரு வெடிப்புகளை இயற்கையாகவே குணப்படுத்த உதவுகிறது. எனினும், சருமத்திற்கு புதிய பொருள்களைப் பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது