தயிர் ஃபேஸ் பேக்
சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையை அதிகரித்து, பிரகாசமாக மாற்ற தயிர் பெரிதும் உதவுகிறது. மேலும் இது சருமத்தை நீரேற்றம் செய்ய உதவுகிறது
தயிர் மற்றும் மஞ்சள்
மஞ்சள் ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்ததாகும். இதனுடன் தயிர் கலந்து பயன்படுத்துவது முகத்திற்கு நல்ல பிரகாசத்தை அளிக்கிறது
தயிர் மற்றும் தேன்
தேன் மற்றும் தயிர் இரண்டுமே ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. இவை சருமத்தை வறட்சியிலிருந்து பாதுகாக்க உதவுகிறது
தயிர் மற்றும் எலுமிச்சை
எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது சருமத்தை பொலிவாக்க உதவுகிறது. இதனுடன் தயிர் சேர்த்து பயன்படுத்துவது கூடுதல் நன்மைகளைத் தருகிறது. இது சாதாரண சருமத்திற்கு சிறந்ததாகும்
தயிர் மற்றும் ஓட்ஸ்
ஓட்ஸ் ஒரு எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்படுவதால், இதை தயிருடன் இணைந்து சிறந்த ஃபேஸ் பேக்கை உருவாக்குகிறது. இது பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்க உதவுகிறது
வேம்பு மற்றும் தயிர்
இந்த ஃபேஸ் பேக் ஆனது மிகவும் உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கானது. இதன் மூலம் தழும்புகள், கரும்புள்ளிகள், நிறமி போன்றவற்றை நீக்கலாம்