உதடு வெடிப்பால் அவதியா? இத ட்ரை பண்ணுங்க

By Gowthami Subramani
06 Dec 2024, 17:21 IST

குளிர்காலத்தில் உதடு வெடிப்பு ஏற்படுவது வலி மற்றும் அசௌகரியத்தைத் தரக்கூடியதாக இருக்கலாம். இதில் உதடு வெடிப்புக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்க உதவும் சில பயனுள்ள வழிகளைக் காணலாம்

கற்றாழை

புதிய கற்றாழை ஜெல் நீரேற்றத்தைத் தருகிறது. இது உலர்ந்த மற்றும் வெடிப்பு உதடுகளை ஆற்றுகிறது. இதற்கு கற்றாழை ஜெல்லின் குளிர்ச்சியான பண்புகளே காரணமாகும்

வெள்ளரிக்காய்

உதடுகளில் வெள்ளரிக்காய் துண்டு பயன்படுத்துவது உடனடி நீரேற்றத்தைத் தருகிறது. மேலும், இதில் உள்ள அதிகளவிலான நீர்ச்சத்துக்கள், விரிந்த உதடுகளை மீண்டும் நீரேற்றம் செய்து புதுப்பிக்கிறது

தேங்காய் எண்ணெய்

உதடுகளில் தேங்காய் எண்ணெயை ஒரு மெல்லிய அடுக்கில் தடவுவது, உதடுகளின் வறட்சியைத் தடுக்கவும் உதவுகிறது. மேலும், இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வறண்ட உதடுகளைக் குணப்படுத்தவும், வறட்சியைத் தடுக்கவும் உதவுகிறது

நெய்

நெய் மற்றும் வெண்ணெய் இரண்டுமே கொழுப்புகள் நிறைந்ததாகும். இவை சருமத்தை நீரேற்றமாகவும், ஊட்டமளிக்கவும், வறண்ட உதட்டிற்கு நிவாரணத்தைத் தருவதாகவும் அமைகிறது

ஆலிவ் எண்ணெய்

இது ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவும் ஒரு இயற்கையான, மென்மையாக்கல் ஆகும். இது உதடுகளை நீரேற்றமாகவும், மென்மையாகவும் வைக்க உதவுகிறது

தேன்

தேன் அதன் இயற்கையான குணப்படுத்தும் பண்புகளுக்கு நன்கு பெயர் பெற்றதாகும். இது ஈரப்பதத்தைத் தரவும், சருமத்தை சரி செய்யவும் உதவுகிறது. இதை உதடுகளில் தடவி நிமிடங்கள் வைப்பது உதடு வெடிப்பைச் சரி செய்கிறது