முகத்திலிருந்து சன்டானை நீக்க அசத்தலான வீட்டுவைத்தியம்!
By Kanimozhi Pannerselvam
14 Feb 2024, 10:36 IST
குங்குமப்பூ
குங்குமப்பூ இழைகளை பாலில் சிறிது நேரம் ஊறவைத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவுவதன் மூலம், உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்கி அதன் இயற்கையான பொலிவை மீட்டெடுக்கிறது.
முல்தானி மிட்டி
முல்தானி மிட்டி, பால், ரோஸ் வாட்டர் கலந்த கலவையை முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமம் பளபளக்கும்.
கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி, 30 நிமிடங்கள் கழுவினால் சன் டான் நீங்குவதோடு சரும ஈரப்பதமும் அதிகரிக்கும்.
தேங்காய் பால்
தேங்காய்ப்பாலில் உள்ள சைட்டோகினின் ஆன்டி ஏஜிங் மற்றும் சன் டானுக்கு எதிராக போராடக்கூடியது. தேங்காய்ப் பாலை தடவி 20-30 நிமிடங்கள் ஊற வைத்து கழுவினால், உங்கள் இயற்கையான பளபளப்பை மீட்டெடுக்கலாம்.
தயிர்
முகத்தில் உள்ள கருமையை நீக்க நீங்கள் தயிர் அல்லது தயிர் மற்றும் மோர் பயன்படுத்தலாம். இதிலுள்ள லாக்டிக் அமிலம் சூரிய ஒளியால் கருமையான சருமத்தை மீட்டெடுக்க உதவுகிறது. தயிருடன் தக்காளி, வெள்ளரி, ஆரஞ்சு ஆகியவற்றில் ஒன்றை கலந்து முகத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது, சன் டானை நீக்கவும் உதவுகிறது. வெள்ளரிக்காய் சாற்றை பருத்தி பஞ்சில் நனைத்து சூரியனின் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தட வேண்டும்.