சரும பராமரிப்பில் ஆரோக்கியமான உணவுமுறையைக் கையாள்வதும் அடங்குகிறது. இளமையாக இருக்க எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளைக் காணலாம்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
மீன் மற்றும் மீன் எண்ணெய் போன்றவை ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் நல்ல ஆதாரங்களாகும். இவை வீக்கத்தை எதிர்த்துப் போராடுவதன் மூலம் உடல் செல்களின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு உதவுகிறது
தக்காளி
இதில் லைகோபீன் உள்ளது. இது உடலை ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவும் பைட்டோ கெமிக்கல் ஆகும்
சர்க்கரைவள்ளிக்கிழங்கு
இதில் வைட்டமின் ஏ சத்துக்கள் உள்ளது. இது சேதமடைந்த கொலாஜனைப் புத்துயிர் பெறச் செய்து, சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது
அவகேடோ
அவகேடோ போன்ற வெண்ணெய் பழங்களில் பாலிசாச்சுரேட்டட் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ளது. இவை சருமத்திற்கு ஊட்டமளித்து வறட்சியைத் தடுக்கிறது
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் வயதான எதிர்ப்புப் பண்புகள் உள்ளது. இதில் வைட்டமின் கே மற்றும் சி நிறைந்துள்ளது. இது சிறந்த சுருக்க எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றிகளாகும்
தயிர்
இதில் கால்சியம், பாஸ்பரஸ், ரிபோஃப்ளேவின், வைட்டமின் பி12 போன்றவை ஏராளமாக உள்ளது. இது செரிமானம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது
மாதுளை
மாதுளை ஒரு சிறந்த ஆன்டி ஆஜிங் டானிக் ஆகும். இது பளபளப்பான சருமத்திற்கும், சருமத்தை இளமையாக வைப்பதற்கும் உதவுகிறது. மேலும் இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைத் தருகிறது
ஸ்ட்ராபெர்ரிகள்
ப்ளாக்பெர்ரி மற்றும் ப்ளூபெர்ரி போன்ற பெர்ரிகளில் ஃபிளவனாய்டுகள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த ஆதாரங்கள் உள்ளன. இது சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது