முக பொலிவு அதிகரிக்க தினமும் காலை இதை சாப்பிடவும்

By Ishvarya Gurumurthy G
01 Aug 2024, 11:30 IST

சருமத்தில் உள்ள கறைகள் மற்றும் பருக்களை குறைக்கவும், பளபளப்பான சருமத்தை பெறவும், தினமும் காலையில் இதை சாப்பிடவும்.

அக்ரூட் பருப்பு

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் அக்ரூட் பருப்பில் காணப்படுகின்றன. இது நச்சுகளை அகற்றவும், ஈரப்பதத்தை பராமரிக்கவும், சருமத்தை பளபளப்பாகவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

சூரியகாந்தி விதைகள்

வைட்டமின் ஈ, புரதம், துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் சூரியகாந்தி விதைகளில் காணப்படுகின்றன. இவற்றை காலையில் உட்கொள்வதால் இயற்கையாகவே சருமம் பொலிவாக இருக்கும்.

அத்திப்பழம்

வைட்டமின் சி, இரும்பு மற்றும் ஆன்டி- ஆக்ஸிடன்ட் பண்புகள் அத்திப்பழத்தில் உள்ளன. இதனை ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் சருமத்தில் உள்ள கறைகள் குறைந்து சருமம் பளபளப்பாக இருக்கும்.

காய்ந்த திராட்சை

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் பண்புகள் காய்ந்த திராட்சையில் காணப்படுகின்றன. இது சருமத்தை மேம்படுத்த உதவுகிறது.

பாதாம்

நல்ல அளவு வைட்டமின்-ஈ மற்றும் ஆன்டி- ஆக்ஸிடன்ட் பண்புகள் பாதாமில் உள்ளன. இது சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கும், வயதானதைத் தடுப்பதற்கும், சருமத்தைப் பொலிவாக்குவதற்கும், புற ஊதாக் கதிர்களில் இருந்து பாதுகாப்பதற்கும் உதவுகிறது.

ப்ரோக்கோலி

வைட்டமின் சி, ஏ மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் ப்ரோக்கோலியில் உள்ளன. இதனை உட்கொள்வதால் முகத்தில் பொலிவு ஏற்படுவதோடு, சருமம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

கிரீன் டீ

கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனை காலையில் உட்கொள்வதால், உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கி, சருமம் பளபளப்பாக இருக்கும்.