குளித்த உடனேயே இந்த 5 தவறுகளை செய்தால்... சருமத்திற்கு ஆபத்து!
By Kanimozhi Pannerselvam
25 Jan 2024, 20:36 IST
மேக்கப்
குளித்த பிறகு, சருமத்தில் உள்ள துளைகள் திறந்திருக்கும். இந்த சமயத்தில் தோல் மிகவும் மென்மையாக இருக்கும் என்பதால் உடனேயே மேக்கப் போடுவது சரும பாதிப்பை ஏற்படுத்தும்
டவல்
குளித்துவிட்டு குளியலறையை விட்டு வெளியே வரும்போது முகத்திலும் உடலிலும் டவலைக் கொண்டு அழுத்தி துடைக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. ஆனால் காலப்போக்கில் இந்தப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் டவலை முகத்தில் தேய்ப்பதால் முகம் சேதமடையும்.
குளித்த பிறகு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது ஒரு நல்ல பழக்கம். ஆனால் ரசாயன கிரீம்கள் அல்லது மாய்ஸ்சரைசர்களை சருமத்தில் தடவுவது சருமம் விரைவில் வயதான தோற்றத்தை அடைய காரணமாக அமைகிறது.
குளிக்கும் முறை
அதிக நேரம் தண்ணீருக்கு அடியில் இருக்க வேண்டாம். இது சருமத்தை உடனடியாக சேதப்படுத்தும். உங்கள் முகத்தின் மீது தொடர்ந்து தண்ணீர் படவும் அனுமதிக்காதீர்கள். இது முகத்தில் விரைவிலேயே சுருக்கங்கள் விழ காரணமாக அமையலாம்.
எண்ணெய்
சிலர் குளித்தவுடன் முகத்தில் எண்ணெய் தடவுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்களின் கூற்றுப்படி, எண்ணெய் முகத்தை மேலும் பொலிவுடன் வைத்திருப்பதோடு, முன்கூட்டிய முதுமையான தோற்றம் வருவதை தடுக்கும் என்கின்றனர். ஆனால் இதையெல்லாம் செய்யவே கூடாது. எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் இதை பயன்படுத்தக்கூடாது.